என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Monday, December 3, 2012

வாழ்க்கை என்றால் என்ன ? பிறப்பு வாழ்வு இறப்பு"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும்.

போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் (குரு பகவான் ) நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் (குரு பகவான் ) தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள்.

கடந்த பிறவியில் உங்கள் சிரமபலனை அனுபவித்த என் (குரு பகவான் ) கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான்.
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Thursday, November 8, 2012

சிதம்பர ரகசியம் CHIDAMBARAM RASGASIYAM


தனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர்இறைவனைக் குறித்துத் துதிக்கதன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள்மனம் வருந்தவிஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும்கூடவே சிவனையும்தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்கவிரும்பிய விஷ்ணுஅவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்கஇரு பக்கமும் தாய்தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும்இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்திஇதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்யஇறைவன்மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூச்சுக் காற்றேசற்றும் சத்தமே இல்லாத இந்தமூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே "அஜபா நடனம்" என்று சொல்லப் படுகின்றது.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Sunday, October 28, 2012

ஸ்ரீ விஷ்ணு வின் ஆயிரம் நாமங்கள் - தமிழில்

விஸ்வம், விஷ்ணு, வஷத்காரா, பூதபவ்யா, பவத் பிரபு, பூதக்ரித், பாவா, பூத்தாத்மா, பூதபாவனா , பூத ஆத்மா , பரமாத்மா, முக்தானாம் பரநார்கதி , அவ்யயா, புருஷா, ஷாக்சி, க்ஷேத்ரன்ஜா , அக்ஷரா , யோகா, யோக விதாம்நேதா, பிரதானா, புருஷா, ஈஸ்வரா, நரஷிம்ஹா , வாப்பு, ஸ்ரீமான், கேசவா, புருஷோத்தமா, சர்வா, ஸ்தாணு, பூத்தாதி,  
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Monday, October 22, 2012

காமத்தை வெல்வது எப்படி ? HOW TO OVERWHELM THE LUST ?


"காமம் பாசத்துடன் வளர்த்த நாய் குட்டி போல "


ஒரு சிஷ்யன் பரமஹம்ஸரிடம் வந்து காமத்தை எப்படி ஜெயிப்பது என்று கேட்டான். தான ஜபதபங்கள் செய்து வந்த போதிலும் தன் மனத்தில் அடிக்கடி கெட்ட நினைவுகள் உண்டாவதாகத் தெரிவித்தான். அதற்குப் பகவான், பதில் சொன்னதாவது : - "ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான், விளையாடுவான், அதைக் கைகளில் தூக்கிக் கொண்டு போவான், அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தை கவனித்த ஓர் அறிஞர், நாய்க்கு அப்படி இடங்கொடுக்கக் கூடாதென்றும், அது பகுத்தறிவற்ற பிராணியாதலால் என்றைக்காவது ஒரு நாள் அவனைக் கடித்துவிடுமென்றும் கூறிவிட்டுச் சென்றனர். நாயின் எஜமானன் இதைக் கேட்டு அதன்படி நடக்க எண்ணித் தன் மடிமீதிருந்த அந்நாயைத் தூர எறிந்துவிட்டு, அதனோடு இனிமேல் ஒருபோதும் கொஞ்சிக் குலாவுவதில்லை என்று தீர்மானம் பண்ணினான். தன் எஜமானனுடைய மனமாற்றத்தை நாய் அறியவில்லையாதலால் அது அடிக்கடி அவனிடம் ஓடி வந்து குலாவத் தலைப்பட்டது. நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனத்தில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த நாயை நீ விலக்க நினைத்தாலும் அது உன்னை எளிதில் விடாது. இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிராமத்தில் அதனுடைய தொந்தரவுகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும். 

பின் குறிப்பு :

பெண்ணாசையை மனிதர்கள் விட்டொழிக்க வேண்டுமென்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசிப்பதிலிருந்து, பெண்களெல்லாம் கொடியவர்களென்றாவது, அவர்களின்மேல் வெறுப்புக் கொள்ள வேண்டுமென்றாவது சொல்வதாகக் கொள்ளுதல் கூடாது. அவர் தமது வாழ்க்கையிலும், உபதேச மொழிகளிலும் பெண் மக்களை சக்தி-ஜகன்மாதாவின் அவதார ரூபங்களாகவே கருதியுள்ளார். ஆண், பெண் இருபாலரும் சிற்றின்ப விஷயங்களில் அகப்பட்டு பகவானை மறக்கக் கூடாதென்பதை வற்புறுத்தவே, ஆத்மலாபமடைய விரும்புபவன் பெண்ணாசையையொழித்தல் வேண்டுமெனக் கூறினார். ஆண் மக்களைப் போன்று பெண் மக்களுக்கும், இவ்வுபதேசம் இன்றியமையாததெனக் கொள்ளல் வேண்டும்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

இறைவனை எப்போது காண முடியும் ? when we can see god ?

குரு ஒருவரை, அவருடைய சீடன் கேட்டான், "குருவே, இறைவனைக் காணும் வழியை எனக்குச் சொல்லுங்கள்", என்று.

அவரும், "என்னுடன் வா, காட்டுகிறேன்", என்று கூறி, அந்த சீடனை அருகிலிருந்த ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் தண்ணீரில் இறங்கினர். திடீரென்று, குருவானவர், சீடனின் தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அழுத்தினார். சில நிமிடங்கள் கழித்துதான் அவனை விடுவித்தார். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சீடன், ஒருவழியாக விடுபட்டு எழுந்து நின்றான்.

"எப்படி இருந்தது?", என்று குரு கேட்டார்.

"என்னால் மூச்சே விட முடியவில்லை. தவித்துப் போய் விட்டேன். செத்து விடுவேன் என்றே நினைத்தேன்", என்றான் சீடன்.

"இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது அவனைக் காண்பாய்", என்றார், குரு.
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Thursday, September 27, 2012

A HISTORY OF CRIMES AGAINST INDIARecently I have gone through an interesting book written by Stephen Knapp on crimes against India : and the need to protect its ancient vedic tradition published by I.Universe, Inc.,New York ; I would like to present here some of the salient points high lighted by him in that book . 

The reason why many Muslim rulers could conquer India was simply because Hindu rulers at home would not unite to fight a common enemy. Knapp puts it plain terms “there was a continuous struggle and warfare between various Rajput states. And these rivalries made itimpossible for the Rajput rulers to join hands to oust Ghazani from Punjab”.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Nazi-Acquired Buddha Statue Came From Space புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது 10,000 வருடம் பழமையானது.It sounds like a mash-up of Indiana Jones' plots, but German researchers say a heavy Buddha statue brought to Europe by the Nazis was carved from a meteorite that likely fell 10,000 years ago along the Siberia-Mongolia border.

This space Buddha, also known as "iron man" to the researchers, is of unknown age, though the best estimates date the statue to sometime between the eighth and 10th centuries. The carving depicts a man, probably a Buddhist god, perched with his legs tucked in, holding something in his left hand. On his chest is a Buddhist swastika, a symbol of luck that was later co-opted by the Nazi party of Germany.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Wednesday, September 26, 2012

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா? kaaba before shiva temple ?[சீதா ராம் கோயல் எழுதிய Islam vis-à-vis Hindu Temples (1993, Voice of India publication) என்ற நூலின் கடைசி அத்தியாயத்தின் மொழியாக்கம் இது. இந்த விஷயம் பற்றி இந்துத் தரப்பிலிருந்து தெளிவான, கூர்மையான வரலாற்றுக் கண்ணோட்ட்த்துடன் எழுதப் பட்ட கட்டுரை இது.

இணையமும் தகவல் தொழில் நுட்பமும் பெரிதாக வளராத 1990களில் சீதாராம் கோயல் இதை எழுதியிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பும் அவர் மீது பெரும் மரியாதையும் ஏற்படுகிற்து. அவரது புனித நினைவுக்கு இந்த மொழியாக்கம் சமர்ப்பணம்].

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Tuesday, September 25, 2012

Kaaba a Hindu Temple? - Understanding Hinduism காபா வில் சிவ லிங்கம் , ஆனால் உடைக்கப்பட்டு இருக்கிறது


   =======  Understanding Hinduism  =======Kaaba a Hindu Temple?

[Note: A recent archeological find in Kuwait unearthed a gold-plated statue of the Hindu deity Ganesh. A Muslim resident of Kuwait requested historical research material that can help explain the connection between Hindu civilisation and Arabia.]

Was the Kaaba Originally a Hindu Temple?
By P.N. Oak (Historian)

Glancing through some research material recently, I was pleasantly surprised to come across a reference to a king Vikramaditya inscription found in the Kaaba in Mecca proving beyond doubt that the Arabian Peninsula formed a part of his Indian Empire.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Monday, September 24, 2012

இஸ்லாமிலும் / இஸ்லாத்திலும் இந்து மத சடங்கு -- hindu rituals are being followed in islam / muslim religion


முகம்மது நபி அவர்கள் இறைவன் அவரிடம் கூறியதை எழுதி வைத்தாரா அல்லது அவருக்கு முன்பே உள்ள வழிப்பாட்டு முறையை தொகுத்து வெளியிட்டாரா என்பதை யோசித்தால் சில உண்மைகள் குழம்ப செய்கின்றன.

அரபு நாட்டில் முகமது நபி அவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே அங்கு விக்கிரக வணக்க மதமும் யூத மதமும் கிருஸ்துவ மதமும் இருந்ததாக இஸ்லாம் நூல்கள் கூறுகின்றன.

யூத கிருஸ்துவ மதங்கள் உருவாவதற்கு முன்பே அங்கே சூரிய வழிபாடும் லிங்க வழிபாடும் சில குட்டி தேவதைகளின் வழிபாடும் இருந்தது.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Wednesday, September 19, 2012

PROTECTIVE VACCINES: MEDICAL OR SPIRITUAL மருந்து ? பக்தி ? - கிருஷ்ணா பக்தி"PROTECTIVE VACCINES: MEDICAL OR SPIRITUAL........!!!"

[WE KNOW SO WELL -HOW TO PREVENT INFECTIONS WITH VACCINES, THEN WHY DO WE NOT WORRY ABOUT A SAFE 'SPIRITUAL VACCINATION' EACH DAY......???]

The essence of The Srimad Bhagavad Gita then, is for one to read, learn, "KNOW," Realize, understand The Absolute Truths and then finally decide to take : " ACTION "

In 'Medical Science' it is often said that several "INFECTIONS" can be prevented just by 'Vaccinating or Immunizing' our self and our loved ones against deadly diseases and actually one of the most Important differences between the developed and developing worlds is the graphic absence of simple Infectious Diseases due to [Matter or Ksetra] earth, water, fire, air and space issues....!!! 
And globally billions of dollars are spent each day on reasearch to find ways to prevent such deadly diseases....!!!
The above diseases affect the young and ignorant the most, then the old and debilitated and finally also the robust, intelligent and healthy.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

விநாயக - vinayagar chathurthi பிள்ளையார் சுத்தி ,LORD GANESH


விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் எல்லாம் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர்.
வெகுகாலத்தின் பின்னரே தமிழகத்தில் இவ்விழா அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.

விநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்

ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Thursday, September 13, 2012

தினம் ஒரு கீதை வாசகம் படிப்போம் ! உண்மையை உணர்வோம் !!!!! DAILY GITA FOR LIFE


பகவத்கீதை 4.8 : நல்லவர்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டவும் யுகந்தோரும் நான் தோன்றுகிறேன் .
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Saturday, September 8, 2012

உலகத்தில் மூத்தவன் தமிழன் !!!! TAMIL AND TAMILAN / TAMIZHAN THE FIRST !!!! TAMIL THE ANCIENT

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Thursday, August 16, 2012

அதிசயம் என்றால் என்ன ? WHAT IS MIRACLE ?
ஒரு செயல் முறையோ அல்லது ஒரு நிகழ்வோ நடக்கும் போது அந்த நிகழ்வு எப்படி நடக்கிறது என்பது பற்றிய அறிவு இல்லாதவன் அந்த நிகழ்வை அதிசயம் என்று கூறுகிறான்.

உண்மையில் அதிசயம் என்று ஒன்றும் இல்லை.

பாஞ்சாலிக்கு கிருஷ்ணர் சேலை கொடுத்த சம்பவத்தை பலரும் அதிசயம் என்றும் பகவான் கிருஷ்ணர் மாஜிக் செய்கிறார் என்றும் கூறுவதுண்டு. ஆனால் உள்ளதை உள்ளபடி அறிகின்ற மனிதன் அதை ஒரு நிகழ்வு என்று கூறுகிறான்.

இறப்பும்  மறுபிறப்பும் பற்றி அறிவியல் விஞ்ஜானி யிடம் கேட்டால் , அவர்களுக்கு ஒன்றும் தெரியாது . கிருஷ்ணர் இறப்புக்கு பின் மறுபிறப்பு நிச்சயம் என்று கூறுவதை அதிசயம் போல் பார்க்கிறார்கள்.

உண்மையை அறியாத மனிதனுக்கு அது அதிசயம் தான் . ஆனால் உள்ளது உள்ளபடி அறிந்தவனுக்கு அது சாதாரணமாக தெரியும்.

எந்த ஒரு சக்தியையும் அழிக்க முடியாது. ஆனால் ஒரு சக்தி மற்றொன்றாக மாறும் என்று கூறுகின்ற அறிவியல் விஞ்ஜானி , மறுபிறப்பு பற்றி மறுப்பது எப்படி ?

மனிதன் என்றால் அவனிடம் ஒரு சக்தி இருக்கிறது அதனால் தான் அவனால் வாழமுடிகிறது. அவன் இறந்து விட்டால் அந்த சக்தி எங்கே போனது. சக்தி அழிக்க முடியாதது என்று கூறுகின்ற விஞ்ஜானி இறந்த மனிதனின் சக்தி எங்கே போனது என்று கூற முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு போதிய அறிவு இல்லை.

ஆனால் கிருஷ்ணர் மிகவும் தெளிவாக சுருக்கமாக கூறி இருக்கிறார். ஆன்மா அழியாதது. அழிக்கமுடியாதது. மனித உடல் அழிந்தால் அது மீண்டும் பிறவி எடுக்கும்.

இறப்பும் மறுபிறப்பும் ஒரு செயல் முறை  “ PROCESS “ . ஆனால் உண்மை அறியாத மனிதன் இதை அதிசயம் என்று கூறுகின்றான்.

உண்மையை அறிந்தவன் அணைத்து நிகழ்வுக்கும் ஒரு செயல் முறை இருப்பதை உணர்கிறான்.

அதிசயம் என்று ஒன்று இருப்பதாக அறிவுடையவன் நினைப்பதில்லை.மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Wednesday, August 15, 2012

யார் உண்மையான அறிவியல் விஞ்ஜானி ? WHO IS ULTIMATE SCIENTIST ? LORD SRI KRISHNA பகவான் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணர்
யார் உண்மையான அறிவியல் விஞ்ஜானி ?

எவன் ஒருவன் உள்ளதை உள்ளபடி அறிந்து இருக்கிறானோ அவனே உண்மையான அறிவியல் விஞ்ஜானி .

பிரபஞ்சம் உருவாக்கத்திற்கு காரணம் யார் ?

நாம் உணவு உண்ணுகிறோம் . உணவு செயல்பட்டு ஒரு விதமான வெப்பம் உடலில் உருவாகிறது. இந்த வெப்பத்தினால் மனிதன் சமநிலையில் செயல் படுகிறான்.

மனிதனின் உடலில் உருவான வெப்பத்திற்கு காரணம் அவன் உண்ட உணவு. அதாவது மனித உடலின் வெப்பத்திற்கு காரணம் மனிதன்.

உலகம் முழுவதும் இருக்கின்ற வெப்பத்திற்கு காரணம் யார் ? , சூரியன் . சூரியன் எப்படி வந்தது. 

எந்த ஒரு நிகழ்விற்கும் கர்த்தா இருக்க வேண்டும். அதாவது எந்த ஒரு நிகழ்வும் யாரவது செய்தால்தான் நிகழும்.

அப்படி இருக்க சூரியன் தானாகவே எப்படி உருவாகி இருக்க முடியும். அது உருவாக யார் காரணமாக இருந்தார் ?

அவர் தான் இறைவன். நாராயணன் 

மேலும் ஹைட்ரோஜன் யும் ஆக்ஸ்சிஜென் யும் சேர்த்தல் நீர் உருவாகும் என்று கூறுகிறார்கள். உலகத்தில் இருக்கின்ற அணைத்து கடலின் நீரையும் உருவாக்கியவன் ஒருவன் இருக்க வேண்டும். அவன் மனிதன் இல்லை என்று கட்டாயம் நமக்கு தெரியும் .பிறகு யார் கர்த்தா ?

அவர் தான் இறைவன் நாராயணன்.மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

EARTH, WATER, FIRE, AIR, SKY, MIND, KNOWLEDGE, VANITY-- SEPARATED ENERGY FROM LORD KRISHNA பஞ்சபூதம்

பகவத்கீதை 7.4 : மண், நீர், தீ, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அகங்காரம் என்று இந்த எட்டு விதமாக பிரித்திக்கின்ற சக்தி என்னுடையதே.


எடுத்துகாட்டாக பசு மாடு மற்றும் பசுவின் பால் இவற்றை எடுத்து கொள்வோம்.

பசுவின் பால் பசு மாட்டில் இருந்து பிரிந்த சக்தி தான்.

பசுவில் இருந்து தான் பால் என்ற சக்தி வந்தது.

பசு இல்லாமல் பால் இல்லை.

அதை போல் மேல சொன்ன எட்டு விதமான சக்திகளும் இறைவன் கிருஷ்ணரிடம் இருந்து பிரிந்த சக்திகளே.


மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Thursday, July 26, 2012

vimalnath-13th Jain Tirthankara


Vimalnath was the thirteenth Jain Tirthankar of the present age (Avasarpini). According to Jain beliefs, he became a Siddha, a liberated soul which has destroyed all of its karma. Vimalnath was born to King Kratvarm Raja and Queen Shyama Devi at Kampilaji in the Ikshvaku clan. His birth date was the third day of the Magh Sukla month of the Indian calendar.

Previous Births of Vimalnath

In his previous incarnation Lord Vimalnath's soul was King Padmasen. King Padmasen ruled over Mahapuri town in Datakikhand. He was always engaged in spiritual practices. Later he took diksha from Acharya Yarsvargupt. As a result of his deep meditational practices he purified his soul to an extent that he acquired the Tirthankar-nam-and-gotra-karma. Because of this he reincarnated in the Mahardhik dimension of gods.

Birth of Lord Vimalnath

King Kritavarman and queen Shyama Devi of Kampilpur were both spiritualists and devotees of the Jina. The queen one day saw fourteen (sixteen according to Digambar Jain Sect) auspicious dreams and the augurs announced that she will give birth to a Tirthankar. The being that was Padmasen descended into the queen's womb from the Mahardhik dimension of gods. On the third day of the Magh Sukla month of the Hindu calendar, queen Shyama Devi gave birth to a son.

Naming Ceremony

During her pregnancy the queen radiated a soothing glow. Her temperature also became congenial, kind, and generous. When the child was born the whole atmosphere was also filled with a soothing glow. Inspired by this spread of purity, the king named his new born son as Vimal (pure/untarnished).

Vimal Kumar as prince and king

In due course, prince Vimal Kumar became young. He was a boy of discipline, high thoughts, great temperament, much more mature from his age. According to his parent's desire he married many times. One day king Kritavarman thought of moving ahead on the path of devotion so he coronated Vimal Kumar as king and left for jungles to practise asceticism. King Vimalnath was an able king and very popular among all.

Path of Renunciation

Slowly King Vimalnath became least interested in the kingdom and all the work were taken care by other persons. One day while, while he was deep in his thoughts he saw himself as King Padmsen of Mahapuri town in Dhatikhand who was always engaged in spiritual practices. This made him realize the true purpose of his birth. For the entire year from that time, he distributed wealth among the people. One day, along with thousand other kings, he came out of the palace, removed his hair with his fist, uttered, “Namo Siddhanam” and became an ascetic.

Omniscience and Nirvana

After two years of spiritual practices he attained omniscience and established the religious ford. Merak Prativasudev, Svayambhu Vasudev, and Bhadra Baldev were his contemporaries.

Bhagavan Vimalnath got Nirvana at Sammed shikharji on the seventh day of the dark half of the month of Ashadh.

Alternate name: Vimalnath
Historical date: 1.6 X 10^211 Years Ago
Family:
Father: Kritvarman
Mother: Suramya (Syama)
Dynasty: Ikshvaku
Places:
Birth: Kampilya
Nirvana: Sammed Shikhar
Attributes:
Colour: Golden
Symbol: Pig
Height: 60 dhanusha (180 meters)
Age At Death: 6,000,000 years old
Attendant Gods:
Yaksha: Shatdukh
Yaksini: Vijaya


மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Thursday, July 19, 2012

மோட்சம் என்றால் என்ன ? moksha நிர்வாணா சமாதி


நாம்  வீட்டில் இருந்தாலும் , நாம் எப்படி வீட்டில் வீட்டிலிருந்து வேறுபட்டு இருக்கிறோமோ !

நாம் சட்டை அணிந்து கொண்டாலும் , நாம் எப்படி சட்டையிலிருந்து வேறுபட்டு இருக்கிறோமோ !!

அதை போல நம் உடலின் இதயத்தில் உள்ள ஆன்மா , நம் உடலின் உள்ளே இருந்தாலும் . அது உடலிலிருந்து வேறுபட்டது.

உடல் பழுதடைந்து விட்டால் அது இந்த உடலை விட்டு வெளியேறிவிடும். அது மீண்டும் பிறவி எடுக்கும் .

ஆனால் உண்மையை உணர்ந்த மனிதனின் ஆன்மா மீண்டும் பிறக்காமல் இறைவனை அடையும் அதாவது பிரம்ம நிலையை அடையும் . இதையே மோட்சம் என்று கூறுகிறார்கள்.


மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

If the Hindus really believe in one God, why do they worship a variety of gods like Siva, Devi, Vishau or Ganapati? Is it not tantamount to accepting many gods and godlings ? As If in approval of this tenet, don't we see these gods competing and conflicting with one another, if we an to believe the stories in our ?இறைவன் பல உருவங்களில் காணபட்டாலும் அவர் ஒருவரே என்பதை சத்வ குணத்தில் இருப்பவர்கள் உணர்கிறார்கள்.


Though Hinduism concedes the existence of several gods or deities, it accepts only one God, the Supreme. Out of these deities, Indra and others are actually ordinary souls like us, who rose to those positions in the cosmic scheme as a result of the extra. ordinary religious merit they had acquired in the previous cycle of creation.
It should be noted here that these deities who rule over  certain aspects of the powers of nature, are like the  officers of the government, who exercise their powers delegated to them by the Head of the State. Once their merit gets exhausted, they have got to vacate their positions and try for Moksha or liberation. 

Next, we take up the case of Brahma, Vishnu and Siva. They are not three independent and separate deities, but three different aspects of the same Supreme God, while engaged in the processes of creation, sustenance and destruction of the universe, in that order. It is similar to the role played by the same person as the father at home, as the boss in the office and as a customer in a shop.மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Thursday, July 5, 2012

EXPLANATION OF ORIGIN OF MAN !!!!! பிறப்பு இறப்பு மறுபிறப்பு தோற்றம் மறைவு அவதரிப்பு அவதாரம்


HOW IS THE BODY LINKED TO THIS EARTH.

EXPLANATION OF ORIGIN OF MAN !!!!!

THE “ SELF ( ATHMA)  “ LEAVING THE PREVIOUS BODY
ACQUIRES A NEW ONE.

IN THE FORMATION OF FIVE OBLATIONS:
FAITH, SOMA ( MOON ), RAIN, FOOD, SEED.

HOW IS A BODY FORMED?

BODY IS FORMED BY ELEMENTS LIKE WATER.
“APHORISMS”  FROM “CHANDOGYA UPANISHAD “

FIRST OBLATION :

THE HEAVEN IS FIRE.
THE SUN , IT’S FUEL.
THE SUN RAYS, IT’S SMOKE
THE DAY , IT’S FLAME.
THE MOON , IT’S EMBERS
THE STARS, IT’S SPARKS.

INTO THIS FIRE THE GODS OFFER THE OBLATION OF FAITH.

OUT OF THIS , THE DIVINE KING SOMA,THE FULL MOON , ARISES.

SECOND OBLATION :

THE RAIN GOD IS INDEED THE FIRE,
THE WIND IS IT’S FUEL.
THE CLOUD , IT’S SMOKE.
THE LIGHTNING , IT’S FLAME.
THE THUNDERBOLT, IT’S EMBERS
THE THUNDER, IT’S SPARKS.

INTO THIS FIRE,

THE GOD OFFERS THE OBLATION OF SOMA.

OUT OF THIS OBLATION, RAIN ARISES.

THIRD OBLATION :

THE EARTH , IT’S FIRE.
THE YEAR, IT’S FUEL.
THE SKY, IT’S SMOKE.
THE NIGHT, IT’S FLAME.
THE FOUR DIRECTIONS, IT’S EMBERS.
THE INTER-DIRECTIONS, IT’S SPARKS.

INTO THIS FIRE,

THE GOD OFFERS THE OBLATION OF RAIN.

OUT OF THIS OBLATION,ARISES FOOD.

FOURTH OBLATION:

MAN INDEED IS THE FIRE.
SPEECH HIS FUEL.
BREATH, HIS SMOKE.
TONGUE HIS FLAME.
EYES, HIS EMBERS.
THE EARS, HIS SPARKS.

INTO THIS FIRE,

THE GOD OFFERS THE OBLATION OF FOOD.

OUT OF THIS OBLATION,THE SEMEN ( SEED) IS CREATED.

FIFTH OBLATION :

WOMAN IS THE FIRE,
MALE ORGAN IS THE FUEL.
COPULATORY INCITATION IS THE SMOKE.
HER GROIN IS THE FLAME.
COPULATION IS THE EMBER.
ORGASM IS THE SPARK.

INTO THIS FIRE,

THE GOD OFFERS SEMEN AS AN OBLATION.

OUT OF THIS OBLATION,FETUS ARISES.

THESE FIVE OBLATION OF ELEMENTS, SUCH AS WATER , GIVES RISE TO MAN.

THE FETUS COVERED WITH MEMBRANE.

LIES WITHIN THE MOTHER’S WOMB.

REMAINS THERE FOR A PRESCRIBED TIME AND THEN IS BORN INTO THIS WORLD.மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Tuesday, July 3, 2012

பிரபஞ்சம் / உலகம் உருவாக்கம் மற்றும் அழிவு -- இவற்றின் சுருக்கம் . SHORT SUMMARY OF UNIVERSE / WORLD CREATION AND DESTRUCTION .மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Tuesday, June 19, 2012

I DO NOT KNOW THE PATH, HOW I CAN ATTAIN GOD ? எனக்கு ஒரு வழியும் தெரிய வில்லையே ,நான் எப்படி இறைவனை அடைய முடியும் ?

பகவத் கீதை 6.5 : உன்னை உன்னாலேயே உயர்த்திக்கொள். உன்னை இழிவு படுத்தாதே. நீயே உனக்கு நண்பன். நீயே உனக்கு பகைவன். 

பகவத் கீதை 18.65 : என்னிடம் மனத்தை வை. என் பக்தனாக இரு. என்னை வழிபாடு, என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு சத்தியம் செய்து இதனை உறுதி கூறுகிறேன். எனக்கு உகந்தவன் நீ.
பலர் நினைப்பதுண்டு ,

நான் பிராமணனாக பிறக்க வில்லை !

நான் சாஸ்திரம் படிக்க வில்லை !!

சமஸ்க்ரிதம் தெரியவில்லை !!!

மந்திரம் தெரிய வில்லை !!!!

நான் எப்படி இறைவனை அடைய முடியும் ?

இறைவனை அடைவதற்கு பிராமணனாக பிறக்க வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.

சாஸ்திரம் படித்து இருக்க வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை

சமஸ்க்ரிதம் படித்து இருக்க வேண்டும் என்று எங்கும் எழுதப்பட வில்லை

மந்திரம் தெரிந்து இருக்க வேண்டும் என்று எங்கும் சொல்லப்பட வில்லை.

அப்படி இருக்க எதற்கு குழப்பம்.

இறைவனை அடைய வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று தான் தேவை.

அது என்ன?

நீங்கள் உங்களை யார் என்று அறிய வேண்டும் ?

நீங்கள் ஆன்மா என்பதை உணருங்கள் . இந்த அழிய கூடிய உடம்பை தற்காலிகமானது என்பதை உணருங்கள். இந்த உடல் அழிய கூடியது. அதனால் இந்த உடலை நிரந்தரம் என்று நினைக்காதீர்கள்.
ஆன்மாவே உண்மை என்பதை உணர்ந்து இறைவனை சரணடையுங்கள் . அவர் வழியை காண்பிப்பார் .
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Monday, June 18, 2012

ஆசை , காமம் , கோபம் மனிதனை நரகத்திற்கு எடுத்து செல்கிறது !!! ANGER, DESIRE ,LUST MAKES MAN TO RUN TOWARDS HELL !!!


ஆன்மா தனியாக இருக்கும் போது அதற்கு கோபம் காமம் ஆசை ஆகியவை இருப்பதில்லை. 

ஆன்மா உடலை எடுத்த உடன் உடல் மனத்தை பெறுகிறது. இந்த மனமே காமம் கோபம் காமம் இவற்றின் இருப்பிடம்.

மனத்தில் இருக்கும் காமம் ஆசை காமம் உடலை எடுத்து அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறது. 

உடலில் இருக்கின்ற ஆன்மா இவை அனைத்தையும் சாட்சி போல் பார்த்து கொண்டு இருக்கிறது. 

உடல் தான் காமத்தில் ஈடு படுகிறது.

உடல் தான் ஆசை படுகிறது.

உடல் தான் கோபத்தை அனுபவிக்கிறது.

மனத்தில் இருக்கின்ற இவை மூன்றும் பாவ புண்ணியத்தை ஜீவனுக்கு தருகிறது.

மனம் இருக்கும் வரை அதில் காமம் ஆசை கோபம் போன்றவை குடி இருக்கும். 

மனம் என்ற ஒன்றை இல்லாமல் ஆக்க வேண்டும் என்றால் ,

உடலின் இதயத்தில் இருக்கின்ற ஆன்மா வை உணர்ந்து அதில் நிலைபெற வேண்டும். அப்படி ஆத்மாவில் நிலை பெற்று விட்டால் மனமும் இருப்பது தெரியாது. உடல் இருப்பதும் தெரியாது.

உலகம் அனைத்தும் ஒன்று என்ற எண்ணம் தோன்றும் .அதாவது பிரம்மம் என்று ஒன்று உள்ளது அதை உணரலாம் .

பிரம்ம நிலையை அடைந்து விட்டால் இறைவனை உணரலாம்.

பிரம்ம நிலை என்றால் என்ன ?

ஒரு ஆண் உயிர் அணு பெண்ணின் கரு உடன் இணைந்து அது ஒரு உயிர் உள்ள கருவை உருவாக்குகிறது.

அது பார்பதற்கு ஒரு சதை பிண்டம் போல் தான் இருக்கும். ஆனால் அந்த சதை பிண்டதிர்க்கு உயிர் இருக்கிறது.

உயிரும் கொஞ்சம் சதையும் இருக்கிறது. அது என்ன நிலையில் இருக்கும். அந்த நிலை தான் பிரம்ம நிலை. அதாவது ஒரு துக்கமும் இல்லை சுகமும் இல்லை அது அமைதியாக பிரபஞ்சத்துடன் இணைந்து பிரபஞ்சமாக எந்த கவலையும் இல்லாமல் கருவில் இருக்கிறது. அது இந்த உலகத்தை கண்டதில்லை. அது காணும் உலகம் ஒன்றும் இல்லாத அமைதியான உலகம்.

கருவில் இருக்கும் சிறு உயிர் பிண்டத்தின் நிலை பிரம்ம நிலைக்கு ஒப்பிடபடுகிறது.
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Sunday, June 17, 2012

ஆன்மா இறைவனின் பகுதியே !!!! SOUL IS PART OF GOD.

எப்படி நதி, ஏறி , மழை நீர் இவை அனைத்தும் கடலை சென்று அடைகிறதோ , அப்படியே அணைத்து ஆன்மா வும் இறைவனை சென்று அடையும்.

நாம் அனைவரும் கடலின் ஒரு நீர் துளி போல.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் அது கடலாக தெரிகிறது. ஆனால் பல கோடி துளிகள் அதில் இருக்கிறது.

அதே போல் தான் இந்த பிரபஞ்சமும்.

இந்த உலகம் முழுவதுமே இறைவனின் சொரூபம் . அதில் தான் அணைத்து ஆன்மாக்களும் இருக்கின்றன.மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

இறப்பும் மறு பிறப்பும் எப்படி நிகழ்கிறது ? STEP BY STEP PROCEDURE OF DEATH AND REBIRTH !!!!

முதலில் இறப்பு என்றால் என்ன என்பதை காண்போம்.

இறப்பு என்பது பழுதடைந்த உடல் செயல் இழப்பதையே இறப்பு அல்லது மரணம் என்று கூறுகிறார்கள்.

நாம் எப்படி சட்டை கிழிந்து விட்டால் அந்த சட்டையை தூக்கி எரிந்து விட்டு புது சட்டை போட்டு கொள்கிறோமோ அதே போல் ஆன்மா உம் புது உடலை எடுக்கும்.

புது உடலை எடுக்கும் நிகழ்சியை மறு பிறப்பு என்று கூறுகிறார்கள். 

ஆனால் இந்த மறு பிறப்பு என்பது உடனே நிகழ்ந்து  விடாது.

ஒரு உடலை ஆன்மா விட்ட வுடன் அந்த ஆன்மா அந்த உடலுடன் இருந்த போது என்னென்ன கர்மங்கள் செய்ததோ அதற்க்கு தகுந்தாற்போல் அது பாவ புண்ணியத்தை சுமந்து கொண்டு இருக்கும். மேலும் கர்ம வாசனைகளும் சுமந்து இருக்கும். கர்ம வாசனை என்றால் நல்ல எண்ணம் இருந்தால் அதுவும் ஆன்மா வுடன் சேர்ந்து செல்லும். கெட்ட எண்ணம் இருந்தால் அதுவும் ஆன்மா வுடன் சேர்ந்து செல்லும். 

இப்படி ஓர் உடலை விட்ட வுடன் ஆன்மா அந்த உடலின் பாவ புண்ணியம் மற்றும்  கர்ம வாசனை இவற்றை சுமந்து செல்லும்.

கருட புராண சாஸ்த்ர படி இந்த ஆன்மா யம தூதர்களால் எடுத்து செல்லப்பட்டு செய்த பாவத்திற்கு உண்டான தண்டனைகளை அனுபவிக்க விடுவார்கள்.

புண்ணிய காரியங்கள் செய்து இருந்தால் அதற்க்கு உண்டான சுப பலனையும் அந்த ஆன்மா அனுபவிக்கும்.

பாவ புண்ணியங்கள் தீர்ந்த பிறகு அந்த ஆன்மா மீண்டும் மேகங்களில் தூக்கி எறியப்படும்.

மேகங்களின் மழையால் அந்த ஆன்மா பூமியை வந்து அடையும்.

பூமியில் விழுந்த வுடன் அந்த ஆன்மா தண்ணீரோடு தண்ணீராக இருந்து தானியங்களை வளர செய்யும்.

அந்த தானியம் உயிரினத்தின் உடலில் உணவாக செல்லும்.

உடலின் உள்ளே உணவாக சென்ற அந்த ஆன்மா உயிர் அணுவாக மாறும்.

அந்த ஆணின் உயிர் அணு கலவியின் போது பெண்ணின் உடலில் செலுத்த படும் போது அந்த ஆன்மா ஒரு உடலை பெரும்.

அந்த உடல் அந்த பெண்ணின் வயிற்றில் வளரும்.

பிறகு வெளியே வரும்.

மீதி உள்ள கர்மத்தை வெளியே வந்த வுடன் செய்யும்.


குறிப்பு : ஒரு மனிதன் இறந்த உடன் , அந்த ஆன்மா எடுத்து செல்லப்பட்டு பாவ  புண்ணியத்திற்கு உண்டான தீய சுப பலனை அனுபவித்த பிறகு கூட ஏன் அவன் மீண்டும் பிறக்க வேண்டும்.

ஏனெனில் அவன் இன்னும் உண்மையை உணரவில்லை. தான் ஆன்மா என்று உணர வில்லை . மேலும் மேலும் பொன் பொருள் போகம் இவற்றில் விருப்பம் கொண்டு இந்த உலகத்தில் கட்டபடுகிறான்.

இறைவனே கதி என்று இறைவனையே நோக்கி செல்பவர்கள் விரைவில் இறைவனை அடைவார்கள். மீண்டும் பிறக்க மாட்டார்கள்.


மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

கர்மங்களை வேள்வியாக செய் !!!! DO ALL DESCRIBED DUTY WITHOUT FAIL AND WITHOUT ATTACHMENT !!!ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒவ்வொரு கடமை வரையருக்கபட்டு இருக்கிறது.

வரையருக்க பட்ட கடமையை விருப்பு வெறுப்பு இல்லாமல் ,செய்யவேண்டும் என்ற மனதுடன் செய்யும் போது அது வேள்வி என்று அழைக்கபடுகிறது.

வேள்வி என்றால் என்ன ?

வேலைகளின் சுழற்சி , அதாவது இயற்கையாகவே இயற்க்கையாலேயே வரையறுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சுழற்சி உடையாமல் நடைபெற்று கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது தான் இந்த உலகம் சுபிக்ஷமாக இருக்கும்.

அதாவது 

யாகங்கள் மற்றும் கிரியைகள் செய்யபடுகிறது. அதன் பலனாக மழை வருகிறது.

மழை, பயிர்களை வளர செய்கிறது.

பயிர்கள் உயிரினங்களை உண்டாக்குகிறது.

உயிரினங்கள் கர்மங்களை செய்கிறது.

கர்மங்களின் ( யாகங்களின் ) பலனாக மழை வருகிறது.

இதே போல் சுழற்சி நடந்து கொண்டே இருக்கும்.

இதில் அணைத்து ஜீவன்களும் அவர் அவர் கடமைகளை செய்ய வேண்டும்.

கடமைகளை செய்யாத போது சுழற்சி சரியாக இருக்காது. அப்போது இயற்கை எதிர் விளைவுகளை உண்டாகும். அதனால் துன்பங்களை எதிர்கொள்ள நேரும்.

எடுத்துகாட்டாக ,

அனைவருமே விவசாயியாக இருந்தால் யார் மருத்துவம் பார்ப்பது , அனைவருமே மருத்துவராக இருந்தால் யார் விவசாயம் செய்வது.

ஆகையால் அனைவருக்கும் வரையருக்க பட்ட கடமையை அனைவரும் விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்ய வேண்டும்.

வரையருக்க பட்ட கடமையில் இருந்து ஓடுபவன் பாவத்தை சம்பாதிப்பான்.


மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Saturday, June 16, 2012

ஆன்மா ஒன்பது கதவு கொண்ட வீட்டில் வசிக்கிறான் !!!!SOUL STAYING INSIDE THE NINE DIRTY GATES!!!

        
ஆன்மா கர்மத்தை செய்ய வேண்டும் என்றால் அவன் உடலை எடுக்க வேண்டும் . வெறும் ஆன்மா கர்மத்தை செய்ய முடியாது. முந்திய பிறவியின் ஆசையின் காரணமாக ஆன்மா உடலை எடுக்கிறது.

உடல் எப்படி பட்டது. ஆன்மா எங்கே இருக்கிறது ?

ஆன்மா உடலின் இதயத்தில் இருக்கிறது. அது வெறும் சாட்சி யாக இருக்கிறது . எந்த கர்மத்தை செய்யவும் தூண்டவும் இல்லை . எந்த கர்மத்தையும் ஆன்மா செய்ய வில்லை.

உடலில் ஒன்பது வாசல் உள்ளது. அது என்ன ?

இரண்டு கண்கள்

இரண்டு காதுகள்

இரண்டு மூக்கு துவாரங்கள்

ஒரு வாய்

மூத்திர துவாரம்

மல துவாரம்     

இப்படி ஒன்பது வாசல் கொண்ட வீட்டில் ஆன்மா வசிகின்றான்.


இந்த ஒன்பது வாசல்களும் எப்படி பட்டது ?

இந்த ஒன்பது வாசல்களும் மிகவும் அசுத்தமானது.

அதாவது ஆன்மா அசுத்தமான ஒன்பது வாசல் கொண்ட வீட்டில் குடி இருக்கிறான். ஏன் ?

கர்மத்தில் பந்த பட்டு இருக்கிறான்.

கர்மத்தில் இருந்து விடு பட்டால் தான் அவன் சுகமான இறை இன்பத்தை அடைய முடியும்.

எப்படி ஒன்பது வாசல்களும் அசுத்தமானது /

கண் தினமும் கழிவுகளை வெளியேற்றும். அது ஊளை என்று அழைக்கபடுகிறது .

காது ஒரு வித கழிவுகளை வெளியேற்றும். அது குறும்பி என்று அழைக்கபடுகிறது.

மூக்கு சளி என்ற கழிவை வெளியேற்றுகிறது.

வாய் எச்சில் மற்றும் கிருமிகளை தினமும் உருவாக்கி வெளியேற்றுகிறது.

மூத்திர துவாரத்தின் மூலம் நீர் சம்பந்த பட்ட கழிவுகள் வெளியேற்ற படுகிறது.

மல துவாரத்தின் மூலம் திட கழிவுகள் வெளியேற்ற படுகிறது ( மலம் ).

இப்படி அணைத்து துவாரமும் கழிவுகளை கொண்டு இருக்கிறது. இப்படி பட்ட உடலில் தான் ஆன்மா அடைபட்டு கிடக்கிறது. 

இது வெளியேற வேண்டும் என்றால் , ஆன்மா முக்தி அடைய வேண்டும்.மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Sunday, June 10, 2012

எது உயர்ந்த உண்மை என்று சொல்லபடுகிறது ? - which is ultimate truth?2.16 : உண்மையற்றது இருக்காது. உண்மையானது இல்லாமல் போகாது இந்த கருத்தை மகான்கள் உணர்ந்து இருகிறார்கள்.

2.17 : எதனால் இந்த உலகம் அனைத்தும் வியாப்பிக்கபட்டுள்ளதோ அது அழிவற்றது.என்பதை அறிந்துகொள். மாறாக அந்த ஒன்றை யாராலும் அழிக்க முடியாது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் , அர்ஜுனனிடம் உரையாடி கொண்டு இருக்கும் போது , அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உண்மையை கூறினார் .

அதாவது இந்த உலகம் எதனால் வியப்பிக்க பட்டு இருக்கிறதோ அது அழியாது என்று கூறினார். அது என்ன ?

அது தான் " ஆத்மா "

உதாரணமாக ஒரு வாகனத்தை எடுத்து கொள்வோம் . வாகனம் நான்கு சக்கரங்களை கொண்டு ஓடும். அந்த சக்கரத்தில் காற்று அடைக்க பட்டு இருக்கும்.

வண்டி ஓடி கொண்டே இருக்கும் . அதாவது வாகனத்தில் உள்ள சக்கரத்தில் உள்ளே காற்று இருக்கும் வரை வாகனம் ஓடி கொண்டே இருக்கும். 

அந்த வாகனத்தின் சக்கரத்தின் டியுப் பஞ்சர் ஆகி விட்டால் அந்த வாகனம் ஓடாது.

அதே போல் தான் ஜீவன்களும் ( மனிதர்களும் ).
மனித உடல் தான் வாகனம் . மனித உடலின் உள்ளே உள்ள இதயத்தில் இருக்கும் ஆத்மா தான் வாகனத்தின் சக்கரத்தின் டியுப் உள்ள காற்று.

டியுப் பஞ்சர் ஆகிவிட்டால் காற்று வெளியேறி , வெளியே உள்ள காற்றுடன் கலந்து விடும்.

அதே போல் மனித உடல் பழுதடைந்து விட்டால் ஆத்மா வெளியேறி விடும்.

மனித உடல் பழுதடைந்தால் அது செயல்களை இழந்த நிலையை அடையும். அந்த நிலையை மரணம் என்று அழைகின்றார்கள்.

மரணம் உடலுக்கு மட்டுமே தவிர ஆத்மா வெளியே இருக்கும். ஆத்மா வெளியேறும் போது அந்த உடலுடன் இருந்த போது செய்த அணைத்து கர்மத்தின் பாவ புண்ணியத்தையும் சுமந்து செல்லும்.

மேலும் ஐந்து புலன்களின் வாசனைகளையும் சுமந்து செல்லும்.

அதாவது ஒரு தெருவில் பூ விற்பவர் பூக்களை சுமந்து வந்து விற்பனை செய்வார். அவர் அந்த தெருவை விட்டு வெளியே சென்ற பிறகு கூட அந்த தெரிவில் பூவின் வாசனை இருக்கும், ஆனால் பூ இல்லை.

அதே போல மனித உடல் இறந்தாலும் அந்த உடலுடன் செய்யபட்ட அணைத்து கர்மத்தின் வாசனையும் ஆத்மா சுமந்து செல்லும்.

அடுத்த உடலை எடுத்து அதே பண்புகளுடன் மீண்டும் கர்மத்தை தொடரும்.

அதனால் தான் கெட்ட எண்ணம் கொண்டவன் அடுத்த பிறவியில் கெட்டவர்கள் மத்தியில் பிறந்து மீண்டும் கெட்ட கர்மங்களை செய்வான்.

நல்ல எண்ணம் உடையவர்கள் அடுத்த பிறவியில் நல்லவர்கள் மத்தியில் பிறந்து நல்ல கர்மங்களை செய்வார்கள்.

ஆனால் இறைவனை அடையவேண்டும் என்ற எண்ணத்துடன் அணைத்து கர்மங்களையும் செய்து கொண்டு ஆனால் அந்த செயலில் பற்று வைக்காமல் இருப்பவர்கள் . மீண்டும் அடுத்த பிறவியிலும் நல்ல பக்தி மான் மத்தியில் பிறந்து இறைவனை அடையும் பணியை தொடர்வார்கள்.
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...
Blogger Widgets