என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Wednesday, February 29, 2012

காட்டுமன்னார்கோயில் இல் உள்ள கோயில்கள்-KATTUMANNARKOIL TEMPLES

காட்டுமன்னார்கோயில் இல் உள்ள கோயில்கள்சிவன் கோயில்
SIVAN TEMPLE
LORD SHIVA TEMPLE AT KATTUMANNARKOIL


பெருமாள் கோயில்
VISHNU TEMPLE
PERUMAL TEMPLE AT KATTUMANNARKOIL


மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

காட்டுமன்னார்கோயில் பள்ளிக்கூடம்

 P R G Hr Sec school
பருவதராஜ குருகுலம் மேல்நிலை பள்ளி 
காட்டுமன்னார்கோயில்P R G higher secondary school 
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Tuesday, February 28, 2012

காட்டுமன்னார்கோயில் வரலாறு, history of kattumannarkoil


காட்டுமன்னார்கோயில் (ஆங்கிலம்:Kattumannarkoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர்மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வரலாறு:

காட்டு மன்னார் கோவில் இது வைணவத் தலமாகும். வைணவப் பெரியார் நாதமுனிகளும் அவர் மூதாதையரான ஸ்ரீஆளவந்தாரும் தோன்றிய ஆலயம். வைணவர்கள் இதனை வீரநாராயணபுரம் எனக்குறிப்பிடுவர். இது காட்டு மன்னார்குடா என்றும் அழைக்கப்படுகின்றது. இது கல்வெட்டுக்களில் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. வீராநாராயணன் என்ற விருதுப் பெயர் கொண்ட முதலாம் பராந்தகனால் இவ்வூர் அமைக்கப்பட்டது என்பர். இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில், கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு:

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,426 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். காட்டுமன்னார்கோயில் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காட்டுமன்னார்கோயில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== அருகில் உள்ள சிறுநகரங்கள் ஊராட்சிகள் ==மெ இலால்பேட்டை ஆயங்குடி

 


மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Sunday, February 26, 2012

கும்ப ராசி சனிபெயர்ச்சி 2011 -2014, AQUARIUS ZODIAC SATURN PLANET 2011-2014


கும்ப ராசி சனிபெயர்ச்சி 2011 -2014
 குப்பை, கூவம், ஓடை, ஆறு எல்லாம் வந்து கலந்தாலும் கொஞ்சமும் உவர்ப்புத் தன்மை மாறாத கடலைப்போல இழப்பு, ஏமாற்றம், தோல்வி, துக்கம் என எது வந்தாலும் ஏற்றுக் கொள்பவர்களே. இதுவரை உங்கள் ராசிநாதனான சனி
பகவான், ராசிக்கு 8ல் அஷ்டமத்துச் சனியாக நின்று கொண்டு உங்களை ஆட்டிப்படைத்தாரே. எல்லோரிடமும் கெட்ட பெயரையும் ஏச்சு, பேச்சுக்களையும் சம்பாதித்ததுடன், பல பிரச்னைகளிலும் சிக்க வைத்தாரே.

இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் 9ம் வீட்டில் உச்சம்பெற்று வலுவாக அமர்வதால் ‘நமக்கேன் வம்பு’ என்று ஓரமாய் ஒதுங்கியிருந்த நீங்கள், இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். தோல்வி பயத்தால் துவண்டு இருந்த உங்கள் மனதில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். உங்கள் ராசிநாதன் யோக வீட்டில் வலுவாக அமர்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து நிம்மதி இல்லாமல் போனதே, இனி ஓரளவு வாஸ்து, வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். வார்த்தையால் வடிக்க முடியாத கஷ்டங்களை எல்லாம் அனுபவித்தீர்களே! மனதிற்குள் நிம்மதியில்லாமல், எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாமல் எப்போதும் ஏதேனும் ஒரு கவலை உங்களை வாட்டி வதைத்ததே! உங்களைவிட தகுதி குறைந்தவர்களுக்கெல்லாம் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருந்தீர்களே! இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.


கணவன்&மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தயங்கினீர்களே!

இனி எதிலும் முன்னிலை வகிப்பீர்கள். நீண்டகால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்னை தீரும். ஆனால் தந்தைக்கு ரத்த அழுத்தம், முதுகு, முழங்கால் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.


பிதுர்வழி சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். பணம் வந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பருமனாக இருந்த நீங்கள், பார்ப்பதற்கு அழகாவீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் இனந்தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, வாகன விபத்து வந்து செல்லும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கான அதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் கம்பீரமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.

தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். தாய்வழியில் ஆதரவு பெருகும்.
9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இக்கால கட்டத்தில் நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை
மாற்றுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். வேற்றுமதத்தினர், நாட்டினர் உதவுவார்கள்.


12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் தனாதிபதியும்&லாபாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் இழுபறிநிலை மாறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

ஷேர் மூலம் லாபமடைவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, வாகன வசதிகள் பெருகும். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.

புது சொத்து சேரும். நிலுவையிலிருந்த வழக்கு வெற்றியடையும். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அத்தை, மாமா வகையில் ஆதரவு பெருகும்.
இல்லத்தரசிகளே! வருங்காலத்தை மனதில் கொண்டு தங்க ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். மாமனார், மாமியாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! நிரந்தர வேலையில்லாமல் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தீர்களே! இனி பணியில் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு சில வேதனைகளை சந்தித்தீர்களே! அந்தநிலை மாறும். தன்னுடன் படித்தவர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே! நமக்கு எப்போது முடியுமோ என்று கலங்கினீர்களே! இனி விரைவிலேயே கெட்டி மேளம்தான். கசந்த காதல் இனிக்கும். மாணவ&மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள்.

வியாபாரிகளே! மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே! இனி சந்தை நிலவரம் அறிந்து புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தடைபட்ட ஒப்பந்தங்கள் தேடிவரும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். வங்கியில் வாங்கியிருந்த கடனை ஒருவழியாக கட்டி முடிப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு.

உத்யோகத்தில் எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் ஒரு அடிமையைப்போல் வேலை பார்த்தீர்களே! உங்களின் பணியில் திருப்தியில்லை என்று அடிக்கடி உயரதிகாரி புலம்பித் தள்ளினாரே, இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் விலகும். புது வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும். சக ஊழியர்களின் தொந்தரவுகள் விலகும்.

அரசியல்வாதிகளே! மாநில அளவில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தலைமையின் வாரிசுகள் உங்களுக்கு தனிப்பட்ட வகையில் உதவுவார்கள். கலைஞர்களே! ஏச்சுப் பேச்சிலிருந்து விடுபடுவீர்கள். வீண் வதந்திகளும் அவப் பெயர்களும் நீங்கும். புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.விவசாயிகளே! நிலத் தகராறால் கோர்ட், கேஸ் என்று போனால் வெற்றி உங்களுக்குத்தான். மகசூல் பெருகும். கூட்டுறவு வங்கி கடனுதவி கிடைக்கும். இந்த சனி மாற்றம் உங்களை தலை நிமிர வைப்பதுடன், நீண்ட நாள் ஆசைகளையும் நிறைவேற்றுவதாகவும் அமையும்.
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Saturday, February 25, 2012

மனிதனின் ஒரு வருடம்மனிதனின் ஒரு வருடம் = தேவர்களின் ஒரு நாள்
( தேவர்களின் பகல் நேரம் = சூரியன் வடக்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –உத்தராயணம் )
( தேவர்களின் இரவு நேரம் = சூரியன் தெற்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –தட்சினாயணம் )
365 தேவர்களின் நாள்             = 1 தேவர்களின் வருடம்
4800 தேவர்களின் வருடம்  = கிருத யுகம் / சத்ய யுகம்
3600 தேவர்களின் வருடம் = திரேத யுகம்
2400 தேவர்களின் வருடம்  = துவப்பார யுகம்
1200 தேவர்களின் வருடம்  = கலி யுகம்
12000 தேவர்களின் வருடம்  = 1 சதூர் யுகம்

1000 சதூர் யுகம் =  பிரம்ம உடைய ஒரு பகல் பொழுது
1000 சதூர் யுகம் = பிரம்ம உடைய ஒரு இரவு பொழுது
14  மனுக்கள் இந்த பிரபஞ்சத்தை தலைமை வகிப்பார்கள்
ஒரு மனுவின் காலம் = ஒரு மன்வந்த்ரம்
பிரம்மா வின் ஒரு பகல்  + பிரம்மா வின் ஒரு இரவு  = பிரம்மா வின் ஒரு நாள்
பிரம்மா வின் 365 நாட்கள்     = பிரம்மா வின் ஒரு வருடம்
பிரம்மா வின் வாழ் காலம் = 100 பிரம்ம வருடங்கள்
பிரம்மா வின் வாழ் காலம் முடிவு = மகாப்ரலயம் ( மொத்த உலகத்தின்  அழிவு )
பிரம்மா வின் வாழ்காலத்தின் முடிவில் மகாப்ரலயம் நிகழும்.அப்போது பிரம்மாவும் அழிக்கபடுவார். அதன் பிறகு 100 பிரம்மா வருடங்களுக்கு ஒரு உருவாக்கமும் இருக்காது. பிறகு பகவான்  விஷ்ணு மீண்டும் ஒரு பிரம்மா வை உருவாக்குவார். பிறகு உருவாக்கம் தொடரும்.
கல்பம் / உருவாக்கம்  = பிரம்மா வின் ஒரு பகல் பொழுது = 4320 மில்லியன்   மனித வருடங்கள்
ப்ரலயம் / அழிவு  = பிரம்மாவின் ஒரு இரவு பொழுது  = 4320 மில்லியன் மனித வருடங்கள்
நான்கு யுகங்களின் சுழற்சி ஆயிரம் முறை  நடப்பது ஒரு கல்பம் ஆகும்.
சத்ய யுகம் = 1728,000 மனித வருடங்கள் : 100 % நன்மக்கள் ; 0 % தீயமக்கள்
திரேத யுகம் = 1296,000 மனித வருடங்கள் : 75 % நன்மக்கள் ; 25 %தீயமக்கள்
துவப்பார யுகம் = 864,000 மனித வருடங்கள் : 50% நன்மக்கள் ; 50 %தீயமக்கள்
கலியுகம் = 432,000 மனித வருடங்கள் : 25 % நன்மக்கள் ; 75 % தீயமக்கள்
ஒவ்வொரு கல்பமும் 14 மன்வந்த்ரம்( காலம்) ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மன்வந்த்ரமும் 71 சுழற்சி வரை நீடிக்கும்.
ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் மனு தலைமை வகிக்கிறான்.  

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

கிருஷ்ண பகவான் வாழ்காலம்

LORD SRI KRISHNA BIRTH DATE 
கிருஷ்ண பகவான் வாழ்காலம்
பிறந்த யுகம் : துவப்பாரா யுகம்
பிறந்த தேதி  : 19 – 07 – 3228 BC
பிறந்த மாதம் : ஆவணி
திதி          : அஷ்டமி
நட்சத்திரம்   : ரோகினி
பிறந்த இடம்  : மதுரா
தாய்          : தேவகி  , வளர்ப்பு தாய் : யசோதை
தந்தை         : வாசுதேவன்
கோகுலம் :            0 வயது  முதல்   -----  3 வயது   4 மாதம் வரை
  கோகுலத்தில் வாழ்ந்த காலம்    =    3  வருடம்  4 மாதம்    
பிருந்தாவன் :  3 வயது 4 மாதம்  முதல்   --- 6 வயது  8 மாதம் வரை
     பிருந்தாவனில் வாழ்ந்த காலம்    =3 வருடம்  4 மாதம்  

 
நந்தா கிராமம் : 6 வயது  8 மாதம்  முதல்--- 10 வயது 2 மாதம்  வரை
    நந்தா கிராமத்தில் வாழ்ந்த காலம்    = 3 வருடம்  4 மாதம்  
  

மதுரா          : 10 வயது 2 மாதம்  முதல்--- 18 வயது  4 மாதம் வரை
        மதுரா வில்  வாழ்ந்த காலம்    =   8 வருடம்  2 மாதம்   

     
துவாரகை       : 18 வயது 4 மாதம்  முதல்---125 வயது வரை
      துவாரகையில் வாழ்ந்த காலம்    = 96 வருடம்  8 மாதம்
    

இறந்த தேதி  :  18 –02 – 3102  BC

கிருஷ்ண பகவான் இறந்து  மேலோகத்தை அடைந்தபிறகு கலியுகம் ஆரம்பித்தது.            
 

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

சிவராத்திரி - SHIVA RATHIRIசிவராத்திரி:
பிரளயம் ஏற்படும் நாளில் உலகின் அனைத்து உயிர்களும் சிவபெருமானின் காலில் ஒடுங்குகின்றன. பிரளய காலத்தில் பார்வதி தேவியார் உலக உயிர்களை காக்க வேண்டி தவம் இருந்து இறைவனை பூஜிக்கிறார். அந்த நாளே சிவராத்திரி. பின்னர் பிரளயம் ஓய்ந்து படைப்பு தொடங்கியது. தான் பூஜித்த சிவராத்திரி நன்னாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளும் வழங்க வேண்டும் என்று பார்வதி தேவி கேட்டுக்கொள்ள, அவ்வாறே அருள்கிறார் சிவபெருமான் என்பது புராணம்.


யார் பெரியவர் என்று சண்டையிட்ட பிரம்மா, விஷ்ணுவின் கர்வத்தை அடக்க அடி முடி தெரியாமல் வானுக்கும் பாதாளத்துக்கும் ஜோதி சொரூபனாக சிவபெருமான் நின்ற தினம் திருக்கார்த்திகை. அவர்கள் தவறை உணர்ந்து வேண்ட, சிவபெருமான் லிங்க ரூபமாக தோன்றி அருளிய நாளே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று ஆண்டு முழுவதும் இது கொண்டாடப்படுகிறது.


தினமும் வரும் இரவு நித்ய சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் வரும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தி மாத சிவராத்திரி. மாசி மாதம் கிருஷ்ண பட்ச பிரதமை முதல் சதுர்த்தசி வரை 13 நாட்கள் பட்ச சிவராத்திரி. திங்கள் கிழமையில் இரவு பகல் முழுவதும் அமாவாசை இருந்தால் யோக சிவராத்திரி. இவற்றில் சிறப்பானதாக கருதப்படுவது மாசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி இரவான மஹா சிவராத்திரி.


சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு இன்றைய தினம் இரவு தொடங்கி விடிய விடிய அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். மிகவும் சக்தி வாய்ந்த, சொல்வதற்கு எளிமையான நமசிவாயஎனப்படும் பஞ்சாட்சர மந்திரம், வேத மந்திரங்கள், சிவன் பாடல்கள் பாடியபடியே இன்றைய தினம் இரவு கண் விழித்து நான்கு கால பூஜைகளையும் அபிஷேகங்களையும் தரிசிப்பது சிறப்பு. வெறுமனே கண் விழித்திருப்பதால் மட்டுமே பயனில்லை. விழித்திருக்கும் நேரம் முழுவதும் பக்தியிலும் சிவ வழிபாட்டிலும் நாட்டம் செலுத்துவது மட்டுமே பயனைத் தரும்.


நாள் முழுக்க அபிஷேங்கள் நடந்துகொண்டிருக்கும் சிவபெருமானுக்கு வெப்பத்தை தருவது வில்வ இலை. மூன்று தளம் கொண்ட வில்வ இலை முக்கண்ணன் சிவனின் அம்சமாக கருதப்படுகிறது. மஹா சிவராத்திரி நாளில் வில்வ இலைகளால் சிவனை பூஜிப்பது மூன்று ஜென்ம பாவங்களை போக்கும், லட்சுமி கடாட்சம் தரும் என்பது ஐதீகம். இரவு விழித்திருந்து நான்கு கால பூஜைகளையும் அபிஷேங்களையும் தரிசித்து சிவன் அருள் பெறுவோமாக
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

ஏகாதசி விரதம்

காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லைஎன்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது.

சித்திரை மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும். வைகாசி & கயிலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். ஆனி & சொர்க்கம் செல்லும் பாக்யம். ஆடி & ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். ஆவணி & மக்கள்செல்வம் உண்டாகும். குழந்தைகளின் நோய், நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு உண்டாகும்.

புரட்டாசி & நிம்மதியான வாழ்வு கிடைக்கும். ஐப்பசி & சகல வளங்களும் உண்டாகும். கார்த்திகை & மகிழ்ச்சியான வாழ்வு மலரும். தை & பித்ரு சாபங்கள் நீங்கி, முன்னோர் அருளாசி கிடைக்கும். மாசி & சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும். பங்குனி & தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜை முடித்து சாப்பிடுவார்கள்.

ஏகாதசிகளில் சிறந்ததாக கூறப்படுவது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி. மனிதர்களுக்கு இரவு, பகல் மாறிமாறி வருவதுபோல தேவர்களுக்கும் உண்டு. ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் அவர்களுக்கு இரவு நேரமான தட்சிணாயனம். தை மாதம் தொடங்கி ஆனி வரையிலான 6 மாதங்கள் பகல் நேரமான உத்தராயனம். பகல் தொடங்குவதற்கு முந்தைய விடியற்காலை நேரம் நமக்கு பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது.

இந்த நேரத்தில் எழுந்திருப்பது, நல்ல காரியங்கள் செய்வது மிகுந்த பலன் உடையதாக கூறப்படுகிறது. தேவர்களைப் பொருத்தவரை, மார்கழி மாதம்தான் பகல் தொடங்குவதற்கு முன்பு வரும் பிரம்மமுகூர்த்தம். அதனால், மாதங்களில் மார்கழி சிறப்பாக கூறப்படுகிறது. அதில் வரும் ஏகாதசி திதி சிறப்பு பெறுகிறது. இதுவே வைகுண்ட ஏகாதசி. பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் மகாவிஷ்ணு விழித்தெழும் காலத்தில் அவனை தொழுவது சகல நலன்களையும் சேர்க்கும் என்பது ஐதீகம்.

முரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக தனது உடலில் இருந்து மோகினியை மகாவிஷ்ணு தோற்றுவித்தார். முரனை மோகினி சம்ஹரித்த நாளே ஏகாதசி. அன்றைய தினம் தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் பெருமாள் அருளினார். எல்லா ஏகாதசிகளும் விரதம் இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசியில் இருக்கலாம். ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமியிலேயே விரதம் தொடங்க வேண்டும். அன்றை தினம் ஒருவேளை மட்டும் சாப்பிடுவார்கள்.

ஏகாதசி தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் சுவாமிக்கு படைத்த பழம், பால் உண்ணலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் பாடலாம். அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலுக்கு பெருமாள் எழுந்தருள்வார். அவரோடு சேர்ந்து நாமும் பரமபத வாசலை மிதிப்பது மிகவும் விசேஷம். அன்றைய தினம் இரவு கண் விழிக்க வேண்டும்.

மறுநாள் துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உள்பட 21 கறியுடன் நிவேதனம் படைத்து ஏழைகள், அடியார்களுக்கு வழங்கி பின்னர் நாம் சாப்பிடுவது சிறப்பானதாகும். வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பது 3 கோடி ஏகாதசிகள் விரதம் இருப்பதற்கான பலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...
Blogger Widgets