என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, February 16, 2012

12 . பக்தி யோகம் ( பக்தி செய் ) ( PATH OF DEVOTION )
12 . பக்தி யோகம்

( பக்தி செய் )

12.1 :  அர்ஜுனன் கேட்டது : எப்போதும் யோகத்தில் நிலைத்திருந்து உன்னை வழிபடுபவர்கள், புலன்களால் அறிய முடியாத அழிவற்ற பிரம்மத்தை நாடுபவர்கள் – இவர்களுள் யோகத்தை நன்றாக அறிந்தவர்கள் யார் ?
12.2 : பகவான் சொன்னது : மனத்தை என்னிடம் வைத்து, யோக பக்தியில் நிலைபெற்று, மேலான சிரத்தையுடன் யார் என்னை வழிபடுகிறார்களோ அவர்கள் மேலான யோகிகள் என்பது எனது கருத்து.
12.3 – 4 : புலன் கூட்டங்களை நன்றாக வசபடுத்தி, எல்லோரிடமும் சமநோக்குடன் எல்லா உயிர்களுக்கும் நன்மையை விரும்பி, சொல்லால் விளக்க முடியாததும் எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு எட்டாததும், மாறாததும், அசைவற்றதும், நிலைத்ததும், அழிவற்றதுமான பிரம்மத்தை வழிபடுபவர்களும் என்னையே அடைகிறார்கள்.
12.5 : நிர்க்குண பிரம்மத்தில் மனத்தை வைக்கின்ற அவர்களுக்கு முயற்சி அதிகம் வேண்டும். ஏனெனில் உடலுனர்வு உடையவர்களுக்கு நிர்க்குண பிரம்ம நெறி மிகவும் கடினமானதாகும்.
12.6 – 7 : அர்ஜுனா ! யார் எல்லா செயல்களையும் எனக்கு அர்ப்பனித்துவிட்டு, என்னையே மேலான கதியாக கொண்டு, வேறெதையும் நாடாத யோகத்தால் என்னையே தியானித்து வழிபடுகிறார்களோ, என்னிடம் மனத்தை செலுத்துகின்ற அவர்கள் மரணம் நிறைந்ததான வாழ்க்கை கடலிலிருந்து நான் விரைவில் கரையேற்றுகிறேன்.
12.8 : என்னிடமே மனத்தை நிலைநிறுத்து, என்னிடம் புத்தியை செலுத்து,அப்போது என்னிடமே வசிப்பாய்.அதில் சந்தேகம் இல்லை.
12.9 : அர்ஜுனா ! என்னிடம் மனத்தை உறுதியாக நிறுத்துவதற்கு முடியாவிட்டால் ஈடுபாட்டுடன் கூடிய இடைவிடாத பயிற்சியால் என்னை அடைய முயற்சி செய்.
12.10 : ஒழுங்காக பயிற்சியில் ஈடுபட முடியாவிட்டால் எனக்காக வேலை செய். எனக்காக வேலை செய்வதன் மூலம் நிறைநிலையை அடைவாய்.
12.11 : இதை கூட செய்ய முடியாவிட்டால், பிறகு என்னில் இணைந்தவனாக, தஞ்சம் அடைந்தவனாக , சுயகட்டுப்பாட்டுடன் வேலை செய்து எல்லா வேலைகளின் பலன்களையும் துறந்துவிடு.
12.12 : பயிற்சியை விட அறிவு மேலானது. அறிவை விட ஆழ்ந்த சிந்தனை சிறந்தது. ஆழ்ந்த சிந்தனையை விட வேலைகளின் பலன்களை துறப்பது மேலானது. ஏனெனில் தியாகத்திலிருந்து விரைவில் அமைதி கிடைக்கிறது.
12.13 – 14 : எந்த உயிரிடமும் வெருப்பற்றவனாக, நண்பனாக, கருணை உடையவனாக, எனது என்ற எண்ணம் இல்லாதவனாக ஆணவம் அற்றவனாக, சுகதுக்கங்களில் சமமாக இருப்பவனாக, பொறுமை உடையவனாக, எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக, யோகியாக, சுயகட்டுப்பாடு உடையவனாக, அசைக்க முடியாத உறுதி உடையவனாக, என்னிடம் மனம் மற்றும் புத்தியை அர்ப்பணித்தவனாக உள்ள பக்தன் எனக்கு பிரியமானவன்.

12.15 : யாரால் உலகம் துன்பபடுவதில்லையோ, யார் உலகத்தால் துன்புருவதால், யார் களிப்பு, கோபம், பயம், கலக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவனோ, அவன் எனக்கு பிரியமானவன்.
12.16 : ஆசையற்ற, தூய, திறமைசாலியான, பற்றற்ற, பயம் இல்லாத, எல்லா விதத்திலும் தன்முனைப்புடன் ( Ego ) செயல்புரிவதை விட்ட எனது பக்தன் எனக்கு பிரியமானவன்.
12.17 :  யார் மகிழ்வதில்லையோ, வெருப்பதில்லையோ, வருந்துவதில்லையோ, ஆசைபடுவதில்லையோ, நன்மை தீமைகளை விட்டவனோ, பக்தியுடையவனோ அவன் எனக்கு பிரியமானவன்.
12.18 – 19 : எதிரி – நண்பன், மானம் – அவமானம், குளிர் – சூடு, சுகம் – துக்கம் போன்ற இருமைகளில் சமமாக இருப்பவன், பற்றற்றவன், புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் சமமாக கருதுபவன், மெளனமாக இருப்பவன், கிடைத்ததை கொண்டு திருப்தி அடைபவன், இருப்பிடம் இல்லாதவன், நிலைத்த அறிவு உடையவன், பக்தி உடையவன் எனக்கு பிரியமானவன்.
12.20 : எந்த பக்தர்கள் சிரத்தையுடன் என்னையே கதியாக கொண்டு இங்கே கூறியது போல் இந்த அமுதம் போன்ற தர்மத்தை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
      
BHAGAVAD GITA CHAPTER 12

No comments:

Post a Comment

Blogger Widgets