என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, February 16, 2012

13 . க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் ( மனிதனும் மருபிறவியும் ) ( CREATION AND THE CREATOR )
13 . க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்

( மனிதனும் மருபிறவியும் ) 

13.1 : பகவான் சொன்னது : அர்ஜுனா ! இந்த உடம்பு வீடு, இதை யார் அறிகிறானோ அவர் அதில் குடியிருப்பவன். உண்மையை உணர்ந்தவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
13.2 : அர்ஜுனா ! எல்லா வீடுகளிலும் குடியிருப்பவன் நான் என்று அறிந்துகொள். வீடு மற்றும் குடியிருப்பவனை பற்றிய அறிவே உண்மை அறிவு என்பது எனது கருத்து .

13.3 : அந்த வீடு எது, எப்படிபட்டது, என்ன மாற்றங்களுக்கு உள்ளாவது எதிலிருந்து எது உண்டாகிறது, குடியிருப்பவன் யார், அவனது மகிமை என்ன ஆகியவற்றை சுருக்கமாக கூறுகிறேன் கேள்.
13.4 : இந்த உண்மையை முனிவர்கள் பல வடிவ பாடல்களில் பல விதமாக பாடியுள்ளனர். காரண காரியங்களுடன் நிச்சயமான வகையில் அமைந்துள்ள பிரம்ம சூத்திரங்களிலும் இது ஆராயப்பட்டுள்ளது.
13.5 – 6 : மகா பூதங்கள், அகங்காரம், புத்தி, அவ்வியக்தம், பத்து கருவிகள், மனம், கருவிகளின் பொருட்கள் ஐந்து, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உடம்பு, உணர்வு, மனஉறுதி ஆகிய மாறுபாடுகளுடன் கூடிய வீடுபற்றி இங்கே சுருக்கமாக சொல்லப்பட்டது.
13.7 : தற்பெருமையின்மை, செருக்கின்மை, கொல்லாமை, பொறுமை, நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி, சுயகட்டுப்பாடு.
13.8 : போக பொருட்களில் நாட்டமின்மை, ஆணவமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய், துயரம் ஆகியவற்றின் கேடுகளை சிந்தித்தல்.
13.9 : பற்றின்மை, மகன் மனைவி வீடு போன்றவற்றை தன்னுடையது என்று கருதாமல் இருப்பது, விரும்புவது விரும்பாதது எது நடந்தாலும் சமமாக ஏற்றுக்கொள்ளல்.
13.10 : வேறு எதையும் நாடாமல் என்னிடம் மாறாத பக்தி கொள்ளல், தனியிடத்தை நாடுதல், மக்கள் கூட்டத்தை விரும்பாதிருத்தல்.
13.11 : ஆன்ம உணர்வில் நிலைபெற்றிருத்தல், லட்சிய நாட்டம் ஆகியவை ஞானம் என்று சொல்லபடுகிறது. இதற்கு வேறானது அஞ்ஞானம்.
13.12 : எதை அறிய வேண்டுமோ, எதை அறிந்தால் மரணமில்லா பெருநிலையை அடையலாமோ அதை சொல்கிறேன். அது ஆரம்பம் இல்லாதது, மேலானது, பெரியது, இருப்பது என்றோ இல்லாதது என்றோ சொல்ல முடியாது.
13.13 : அந்த பரம்பொருள் எங்கும் கைகள், கால்கள், கண்கள், தலைகள், வாய்கள், காதுகளை உடையவர். அவர் உலகில் எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கிறார்.
13.14 : அவர் எல்லா புலன்களையும் இயங்க செய்கிறார் ஆனால் அவர் எந்த புலன்களும் இல்லாதவர், பற்றற்றவர், ஆனால் அனைத்தையும் தாங்குகிறார். குணமே இல்லாதவர் ஆனால் எல்லா குணங்களையும் அனுபவிக்கிறார்.
13.15 :அவர் பொருட்களுக்கு வெளியிலும் உள்ளேயும் இருக்கிறார். அசையாததும் அசைவதுமாகிய பொருட்கள் எல்லாம் அவரே, நுண்மையாக இருப்பதால் அவர் அறியபட முடியாதவர். அவர் தூரத்தில் இருக்கிறார். அருகிலும் இருக்கிறார்.
13.16 : அறியப்பட வேண்டிய அந்த பரம்பொருள் பிரிவுபடாதவர். பொருட்களில் பிரிவுபட்டது போல் தோன்றுகிறார். பொருட்களை தோற்றுவிப்பதும், தாங்குவதும், தன்னுள்கொள்வதும் அவரே.
13.17 : அந்த இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கிறார். அவர் இருளுக்கு அப்பாற்பட்டவர், அவரே ஞானம், அறியபடவேண்டியவர், எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருப்பவர்.
13.18 : இவ்வாறு வீடும், ஞானமும், அறியபடவேண்டிய பொருளும் பற்றி சுருக்கமாக கூறப்பட்டது. என் பக்தன்  இதை அறிந்து, என் நிலைக்கு தகுதி ஆகிறான்.
13.19 : இயற்கை, இறைவன் இரண்டிற்கும் ஆரம்பம் கிடையாது. மாற்றங்களும் குணங்களும் இயற்கையிலிருந்து பிறந்தவை என்பதை அறிந்து கொள்.
13.20 : உடம்பையும் புலன்களையும் உண்டாக்குவதில் இயற்கை காரணம் என்று சொல்லபடுகிறது. சுக துக்கங்களை அனுபவிப்பதில் ஜீவன் காரணம் என்று சொல்லபடுகிறது.
13.21 :இயற்கையை சேர்ந்தவனான ஜீவன், இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களை அனுபவிக்கிறான். குணங்களின் மீதுள்ள பற்றுதலே அவனது நல்ல தீய பிறவிகளுக்கு காரணமாகிறது.
13.22 : இந்த உடம்பில் உள்ள ஆன்மா சாட்சி, அனுமதிப்பவர், தாங்குபவர், அனுபவிப்பவர், மேலான தலைவர், பரம்பொருள், கடவுள் என்றெல்லாம் சொல்லபடுகிறது.
13.23 : ஆன்மாவையும், குணங்களுடன் கூடிய இயற்கையையும் யார் இவ்வாறு அறிகிறானோ, அவன் எவ்வாறு வாழ்பவனாக இருந்தாலும் மீண்டும் பிறப்பதில்லை.
13.24 : சிலர் தியானத்தின் மூலம் தெளிந்த புத்தியால் ஆன்மாவை உள்ளத்தில் காண்கிறார்கள். சிலர் ஞான யோகத்தினாலும் சிலர் கர்ம யோகத்தினாலும் காண்கிறார்கள்.
13.25 : இன்னும் சிலரோ இவ்வாறு அறியாதவர்கள், ஆனால் பிறரிடமிருந்து கேட்டு வழிபடுகின்றனர். கேட்டதில் முழு மனத்துடன் சாதனைகளில் ஈடுபடுகின்ற அவர்களும் மரணத்தை நிச்சயமாக கடக்கின்றனர்.
13.26 : பரத குலத்தில் சிறந்தவனே ! அசையாததும் அசைவதுமாகிய எந்த பொருள் தோன்றியிருந்தாலும், அது வீடு மற்றும் குடியிருப்பவன் இரண்டின் சேர்க்கையாலேயே தோன்றியுள்ளது என்று அறிந்து கொள்.
13.27 : எல்லா உயிரினங்களிலும் சமமாக உறைபவரும், அழிகின்ற பொருட்களுக்குள் அழியாமல் இருப்பவரும் ஆகிய மேலான இறைவனை யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.
13.28 : எங்கும் சமமாக நிறைந்து இருக்கின்ற இறைவனை காண்பவன் தன்னால் தன்னை அழித்துகொல்வதில்லை. அதனால் மேலான கதியை அடைகிறான்.
13.29 : எல்லா செயல்களும் இயற்கையினாலேயே செய்யபடுகின்றன என்றும் இறைவன் தன்முனைப்பற்றவர் என்றும் யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.
13.30 : பல்வேறு உயிரினங்கள் ஒன்றில் இருப்பதையும் அந்த ஒன்றில் இருந்தே அவை அனைத்தும் விரிந்து வெளிபடுவதையும் எப்போது ஒருவன் காண்கிறானோ அப்போது அவன் இறைநிலையை அடைகிறான்.
13.31 : குந்தியின் மகனே ! ஆதி இல்லாததாலும் குணங்கள் இல்லாததாலும் அழிவற்ற இறைவன் இந்த உடம்பில் இருந்தாலும் செயல் புரிவதில்லை. பற்று கொல்வதும் இல்லை.
13.32 : எங்கும் பரந்துள்ள ஆகாசம் நுண்மை காரணமாக எப்படி எதனாலும் பாதிக்கபடுவதில்லையோ அப்படியே உடம்பு முழுவதும் நிறைந்துள்ள ஆன்மாவும் பாதிக்கபடுவதில்லை.
13.33 : அர்ஜுனா ! ஒரே சூரியன் இந்த உலகம் முழுவதையும் எப்படி ஒளிர செய்கிறானோ, அப்படியே குடியிருப்பவனாகிய இறைவன் உடம்பு, உயிர், மனம் அனைத்தையும் இயங்க செய்கிறான்.
13.34 : இவ்வாறு, வீடு மற்றும் குடியிருப்பவனுக்கு இடையிலுள்ள வேறுபாட்டையும் மக்கள் இயற்கையின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதையும் ஆன்மீக அனுபூதியின் வாயிலாக யார் உணர்கிறார்களோ, அவர்கள் மேலான நிலையை அடைகிறார்கள்.                


BHAGAVAD GITA CHAPTER 13      

No comments:

Post a Comment

Blogger Widgets