என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, February 16, 2012

17 . ச்ரத்தா த்ரய விபாக யோகம் ( வாழ்க்கையின் மூன்று கோணங்கள் ) THREE FOLD FAITH


17 . ச்ரத்தா த்ரய விபாக யோகம்
THREE FOLD FAITH
( வாழ்க்கையின் மூன்று கோணங்கள் )





17.1 : அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! யார் சாஸ்திர விதிப்படி அல்லாமல், ஆனால் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்களோ அவர்களின் நிலை என்ன ? சத்வ குணமா ? ரஜோ குணமா ? தமோ குணமா ?
17.2 : பகவான் சொன்னது : மனிதர்களுக்கு இயல்பாக அமைந்துள்ள அந்த நம்பிக்கைகள் சாத்வீகம், ராஜசம், தாமசம் என்று மூன்று விதமாக உள்ளது. அதை கேள்.
17.3 : அர்ஜுனா ! இயல்பிற்கு ஏற்பவே மனிதனின் நம்பிக்கைகள் அமைகின்றன. நம்பிக்கைகளின் விளைவே மனிதன். நம்பிக்கைகளே அவனை உருவாக்குகின்றன.
17.4 : சாத்வீகர்கள் தேவர்களை வணங்குகிறார்கள். ராஜச இயல்பினர் யட்சர்களையும் ராட்சசர்களையும், தாமச இயல்பினர் ஆவிகளையும் பூதங்களையும் வழிபடுகிறார்கள்.
17.5 – 6 : கர்வமும் அகங்காரமும் காமமும் ஆசையும் தீவிரமாக செயல்படுகின்ற மூடர்கள், உடம்பில் இருக்கின்ற புலன்களையும் உடம்பில் உறைகின்ற என்னையும் துன்புறுத்தி, சாஸ்திரத்தில் விதிக்கபடாத கோரமான தவம் செய்கிறார்கள். அவர்கள் அசுர இயல்பினர் என்று அறிந்து கொள்.
17.7 : எல்லோருக்கும் விருப்பமான உணவும் மூன்று வகைபடுகிறது. அவ்வாறே வழிபாடும் தவமும் தானமும் அவற்றின் வேற்றுமைகளை கேள்.
17.8 : ஆயுள், அறிவு, வலிமை, ஆரோக்கியம், சுகம், சுறுசுறுப்பு ஆகியவற்றை வளர்க்கின்ற, சாறுமிக்க, மென்மையான, சத்துமிக்க, இனிய உணவு சாத்வீகர்களுக்குப் பிரியமானது.
17.9 : கசப்பு, புளிப்பு மற்றும் உவர்ப்பு சுவையுடையவை, சூட்டை உண்டாக்குபவை, காரமானவை, எரிச்சல் ஊட்டுபவை, தாகத்தை ஏற்படுத்துபவை, துக்கம், கவலை மற்றும் நோயை உண்டாக்குபவை – இத்தகைய உணவு ரஜோ குணத்தினருக்கு பிரியமானவை.
17.10 : நாட்பட்டது, இயற்கை சுவையை இழந்தது, துர்நாற்றம் உடையது, பழையது, எச்சில், தூய்மையற்றது – இத்தகைய உணவு தமோ குணத்தினருக்கு பிரியமானது.
17.11 : வழிப்பட்டேயாக வேண்டும் என்று மனத்தை உறுதிபடுத்தி கொண்டு, பலனை விரும்பாமல், சாஸ்திர விதிப்படி எந்த வழிபாடு செய்யபடுகிறதோ அது சாத்வீகமானது.

17.12 : பரத குலத்தில் சிறந்தவனே ! பலனை விரும்பியோ, ஆடம்பரதிற்காகவோ செய்யபடுகின்ற, வழிபாடு ராஜசமானது என்று அறிந்து கொள்.
17.13 : விதிப்படி அல்லாத, அன்னதானம் இல்லாத, மந்திரமின்ற செய்யபடுகின்ற, தட்சினை இல்லாத, சிரத்தையின்றி செய்யபடுகின்ற வழிப்பாட்டை தாமசம் என்று சொல்கிறார்கள்.
17.14 : தேவர், சான்றோர், குருமார், அறிஞர் போன்றோரை கௌரவிப்பது, சுத்தம், நேர்மை, பிரம்மசரியம், அஹிம்சை இவை உடலால் செய்யபடுகின்ற தவம்.
17.15 : பிறர் மனத்தை நோக செய்யாத, உண்மையான, இனிமையான,இதமான வார்த்தைகளை பேசுவதும், வேதம் ஓதுவதற்கு பயிற்சி செய்வதும் வாக்கினால் செய்யபடுகின்ற தவம்.
17.16 : மனத்தெளிவு, மென்மை, மௌனம், சுயகட்டுப்பாடு, தூயநோக்கம் இவை மன தவம் என்று சொல்லபடுகிறது.
17.17 : பலனை விரும்பாத, யோகத்தில் நிலைபெற்ற மனிதர்களால் மிகுந்த சிரத்தையுடன் இந்த மூன்று விதமான தவமும் செய்யப்படும் போது அது சாத்வீகமானது.
17.18 : பாராட்டு, மதிப்பு, புகழ், இவற்றிற்காக ஆடம்பரத்துடன் செய்யபடுகின்ற தவம் ராஜசமானது. அது உறுதியற்றது. தற்காலிகமானது.
17.19 : முட்டாள் தனத்தால் தன்னை துன்புருத்தியோ பிறரை அழிப்பதற்க்காகவோ செய்யபடுகின்ற தவம் தாமசம் என்று சொல்லபடுகிறது.
17.20 : கொடுப்பது கடமை என்று தகுந்த இடத்தில் தகுந்த வேளையில் தகுந்த நபருக்கு, பிரதியாக அவர் எதுவும் செய்யமாட்டார் என்று தெரிந்தும் செய்யபடுவது சாத்வீக தானம்.
17.21 : பிரதி பலனை எதிர்பார்த்தோ, விளைவை உத்தேசித்தோ, வருத்ததுடனோ செய்யபடுவது ராஜச தானம்.
17.22 : தகாத இடத்தில் தகாத காலத்தில் தகாதவர்களுக்கு ஏனோதானோ என்றும் இகழ்ச்சியுடனும் கொடுக்கபடுவது தாமச தானம்.
17.23 : “ஓம் தத் ஸத்” என்று இறைவன் மூன்று விதமாக அழைக்கபடுகிறார். அவரிலிருந்தே முற்காலத்தில் சான்றோர்கள் படைக்கபட்டனர். வேதங்களும் யாகங்களும் தோன்றின.
17.24 : எனவே வேதங்களை பின்பற்றுபவர்கள் வழிபாடு, தானம், தவம் போன்ற கிரியைகளை சாஸ்திரங்களின் விதிப்படி செய்யும் போது “ஓம்” என்று உச்சரித்தே தொடங்குகிறார்கள்.
17.25 : மோட்சத்தை நாடுபவர்கள் யாகம்,தவம், தானம் போன்றவற்றை செய்யும் போது பலனை விரும்பாமல் “தத்” என்று உச்சரித்து செய்கிறார்கள்.
17.26 : அர்ஜுனா ! “ஸத்” என்ற சொல் உண்மை என்ற கருத்திலும், நன்மை என்ற கருத்திலும் வழங்கபடுகிறது.அவ்வாறே மங்களகரமான காரியங்களிலும் ஸத் என்ற சொல் உபயோகிக்கபடுகிறது.
17.27 : வழிபாட்டிலும் தவத்திலும் தானத்திலும் நிலைத்திருப்பது ஸத் என்று சொல்லபடுகிறது. இறைவனுக்காக செய்யபடுகின்ற கர்மமும் “ஸத்” என்றே சொல்லபடுகிறது.
17.28 : அர்ஜுனா ! சிரத்தை இல்லாமல் செய்த யாகமும், கொடுத்த தானமும் செய்த தவமும், மற்ற கர்மங்களும் “அஸத்” எனப்படும். அது இந்த உலகத்திற்கும் உதவாது. மேல் உலகத்திற்கும் உதவாது.        


CHAPTER 17 BHAGAVAD GITA THREE FOLD FAITH

No comments:

Post a Comment

Blogger Widgets