என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Saturday, March 3, 2012

வீராணம் ஏரிவீராணம் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் உள்ள நகரம் காட்டுமன்னார்கோயில். வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது சோழர்களால் கட்டப்பட்ட ஏரியாகும். இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி (mcft).
காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள அணைக்கரை என்னும் கீழ்அணையிலிருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது.
வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ தொலைவிலுள்ளது. இவ்வேரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர 1968 ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு 180 MLD குடிநீர் கொண்டுவரும் திட்டம் 2004ல் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment

Blogger Widgets