என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Sunday, June 17, 2012

கர்மங்களை வேள்வியாக செய் !!!! DO ALL DESCRIBED DUTY WITHOUT FAIL AND WITHOUT ATTACHMENT !!!ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒவ்வொரு கடமை வரையருக்கபட்டு இருக்கிறது.

வரையருக்க பட்ட கடமையை விருப்பு வெறுப்பு இல்லாமல் ,செய்யவேண்டும் என்ற மனதுடன் செய்யும் போது அது வேள்வி என்று அழைக்கபடுகிறது.

வேள்வி என்றால் என்ன ?

வேலைகளின் சுழற்சி , அதாவது இயற்கையாகவே இயற்க்கையாலேயே வரையறுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சுழற்சி உடையாமல் நடைபெற்று கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது தான் இந்த உலகம் சுபிக்ஷமாக இருக்கும்.

அதாவது 

யாகங்கள் மற்றும் கிரியைகள் செய்யபடுகிறது. அதன் பலனாக மழை வருகிறது.

மழை, பயிர்களை வளர செய்கிறது.

பயிர்கள் உயிரினங்களை உண்டாக்குகிறது.

உயிரினங்கள் கர்மங்களை செய்கிறது.

கர்மங்களின் ( யாகங்களின் ) பலனாக மழை வருகிறது.

இதே போல் சுழற்சி நடந்து கொண்டே இருக்கும்.

இதில் அணைத்து ஜீவன்களும் அவர் அவர் கடமைகளை செய்ய வேண்டும்.

கடமைகளை செய்யாத போது சுழற்சி சரியாக இருக்காது. அப்போது இயற்கை எதிர் விளைவுகளை உண்டாகும். அதனால் துன்பங்களை எதிர்கொள்ள நேரும்.

எடுத்துகாட்டாக ,

அனைவருமே விவசாயியாக இருந்தால் யார் மருத்துவம் பார்ப்பது , அனைவருமே மருத்துவராக இருந்தால் யார் விவசாயம் செய்வது.

ஆகையால் அனைவருக்கும் வரையருக்க பட்ட கடமையை அனைவரும் விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்ய வேண்டும்.

வரையருக்க பட்ட கடமையில் இருந்து ஓடுபவன் பாவத்தை சம்பாதிப்பான்.


No comments:

Post a Comment

Blogger Widgets