என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Tuesday, June 19, 2012

I DO NOT KNOW THE PATH, HOW I CAN ATTAIN GOD ? எனக்கு ஒரு வழியும் தெரிய வில்லையே ,நான் எப்படி இறைவனை அடைய முடியும் ?

பகவத் கீதை 6.5 : உன்னை உன்னாலேயே உயர்த்திக்கொள். உன்னை இழிவு படுத்தாதே. நீயே உனக்கு நண்பன். நீயே உனக்கு பகைவன். 

பகவத் கீதை 18.65 : என்னிடம் மனத்தை வை. என் பக்தனாக இரு. என்னை வழிபாடு, என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு சத்தியம் செய்து இதனை உறுதி கூறுகிறேன். எனக்கு உகந்தவன் நீ.
பலர் நினைப்பதுண்டு ,

நான் பிராமணனாக பிறக்க வில்லை !

நான் சாஸ்திரம் படிக்க வில்லை !!

சமஸ்க்ரிதம் தெரியவில்லை !!!

மந்திரம் தெரிய வில்லை !!!!

நான் எப்படி இறைவனை அடைய முடியும் ?

இறைவனை அடைவதற்கு பிராமணனாக பிறக்க வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.

சாஸ்திரம் படித்து இருக்க வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை

சமஸ்க்ரிதம் படித்து இருக்க வேண்டும் என்று எங்கும் எழுதப்பட வில்லை

மந்திரம் தெரிந்து இருக்க வேண்டும் என்று எங்கும் சொல்லப்பட வில்லை.

அப்படி இருக்க எதற்கு குழப்பம்.

இறைவனை அடைய வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று தான் தேவை.

அது என்ன?

நீங்கள் உங்களை யார் என்று அறிய வேண்டும் ?

நீங்கள் ஆன்மா என்பதை உணருங்கள் . இந்த அழிய கூடிய உடம்பை தற்காலிகமானது என்பதை உணருங்கள். இந்த உடல் அழிய கூடியது. அதனால் இந்த உடலை நிரந்தரம் என்று நினைக்காதீர்கள்.
ஆன்மாவே உண்மை என்பதை உணர்ந்து இறைவனை சரணடையுங்கள் . அவர் வழியை காண்பிப்பார் .
No comments:

Post a Comment

Blogger Widgets