என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, August 16, 2012

அதிசயம் என்றால் என்ன ? WHAT IS MIRACLE ?
ஒரு செயல் முறையோ அல்லது ஒரு நிகழ்வோ நடக்கும் போது அந்த நிகழ்வு எப்படி நடக்கிறது என்பது பற்றிய அறிவு இல்லாதவன் அந்த நிகழ்வை அதிசயம் என்று கூறுகிறான்.

உண்மையில் அதிசயம் என்று ஒன்றும் இல்லை.

பாஞ்சாலிக்கு கிருஷ்ணர் சேலை கொடுத்த சம்பவத்தை பலரும் அதிசயம் என்றும் பகவான் கிருஷ்ணர் மாஜிக் செய்கிறார் என்றும் கூறுவதுண்டு. ஆனால் உள்ளதை உள்ளபடி அறிகின்ற மனிதன் அதை ஒரு நிகழ்வு என்று கூறுகிறான்.

இறப்பும்  மறுபிறப்பும் பற்றி அறிவியல் விஞ்ஜானி யிடம் கேட்டால் , அவர்களுக்கு ஒன்றும் தெரியாது . கிருஷ்ணர் இறப்புக்கு பின் மறுபிறப்பு நிச்சயம் என்று கூறுவதை அதிசயம் போல் பார்க்கிறார்கள்.

உண்மையை அறியாத மனிதனுக்கு அது அதிசயம் தான் . ஆனால் உள்ளது உள்ளபடி அறிந்தவனுக்கு அது சாதாரணமாக தெரியும்.

எந்த ஒரு சக்தியையும் அழிக்க முடியாது. ஆனால் ஒரு சக்தி மற்றொன்றாக மாறும் என்று கூறுகின்ற அறிவியல் விஞ்ஜானி , மறுபிறப்பு பற்றி மறுப்பது எப்படி ?

மனிதன் என்றால் அவனிடம் ஒரு சக்தி இருக்கிறது அதனால் தான் அவனால் வாழமுடிகிறது. அவன் இறந்து விட்டால் அந்த சக்தி எங்கே போனது. சக்தி அழிக்க முடியாதது என்று கூறுகின்ற விஞ்ஜானி இறந்த மனிதனின் சக்தி எங்கே போனது என்று கூற முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு போதிய அறிவு இல்லை.

ஆனால் கிருஷ்ணர் மிகவும் தெளிவாக சுருக்கமாக கூறி இருக்கிறார். ஆன்மா அழியாதது. அழிக்கமுடியாதது. மனித உடல் அழிந்தால் அது மீண்டும் பிறவி எடுக்கும்.

இறப்பும் மறுபிறப்பும் ஒரு செயல் முறை  “ PROCESS “ . ஆனால் உண்மை அறியாத மனிதன் இதை அதிசயம் என்று கூறுகின்றான்.

உண்மையை அறிந்தவன் அணைத்து நிகழ்வுக்கும் ஒரு செயல் முறை இருப்பதை உணர்கிறான்.

அதிசயம் என்று ஒன்று இருப்பதாக அறிவுடையவன் நினைப்பதில்லை.மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Wednesday, August 15, 2012

யார் உண்மையான அறிவியல் விஞ்ஜானி ? WHO IS ULTIMATE SCIENTIST ? LORD SRI KRISHNA பகவான் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணர்
யார் உண்மையான அறிவியல் விஞ்ஜானி ?

எவன் ஒருவன் உள்ளதை உள்ளபடி அறிந்து இருக்கிறானோ அவனே உண்மையான அறிவியல் விஞ்ஜானி .

பிரபஞ்சம் உருவாக்கத்திற்கு காரணம் யார் ?

நாம் உணவு உண்ணுகிறோம் . உணவு செயல்பட்டு ஒரு விதமான வெப்பம் உடலில் உருவாகிறது. இந்த வெப்பத்தினால் மனிதன் சமநிலையில் செயல் படுகிறான்.

மனிதனின் உடலில் உருவான வெப்பத்திற்கு காரணம் அவன் உண்ட உணவு. அதாவது மனித உடலின் வெப்பத்திற்கு காரணம் மனிதன்.

உலகம் முழுவதும் இருக்கின்ற வெப்பத்திற்கு காரணம் யார் ? , சூரியன் . சூரியன் எப்படி வந்தது. 

எந்த ஒரு நிகழ்விற்கும் கர்த்தா இருக்க வேண்டும். அதாவது எந்த ஒரு நிகழ்வும் யாரவது செய்தால்தான் நிகழும்.

அப்படி இருக்க சூரியன் தானாகவே எப்படி உருவாகி இருக்க முடியும். அது உருவாக யார் காரணமாக இருந்தார் ?

அவர் தான் இறைவன். நாராயணன் 

மேலும் ஹைட்ரோஜன் யும் ஆக்ஸ்சிஜென் யும் சேர்த்தல் நீர் உருவாகும் என்று கூறுகிறார்கள். உலகத்தில் இருக்கின்ற அணைத்து கடலின் நீரையும் உருவாக்கியவன் ஒருவன் இருக்க வேண்டும். அவன் மனிதன் இல்லை என்று கட்டாயம் நமக்கு தெரியும் .பிறகு யார் கர்த்தா ?

அவர் தான் இறைவன் நாராயணன்.மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

EARTH, WATER, FIRE, AIR, SKY, MIND, KNOWLEDGE, VANITY-- SEPARATED ENERGY FROM LORD KRISHNA பஞ்சபூதம்

பகவத்கீதை 7.4 : மண், நீர், தீ, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அகங்காரம் என்று இந்த எட்டு விதமாக பிரித்திக்கின்ற சக்தி என்னுடையதே.


எடுத்துகாட்டாக பசு மாடு மற்றும் பசுவின் பால் இவற்றை எடுத்து கொள்வோம்.

பசுவின் பால் பசு மாட்டில் இருந்து பிரிந்த சக்தி தான்.

பசுவில் இருந்து தான் பால் என்ற சக்தி வந்தது.

பசு இல்லாமல் பால் இல்லை.

அதை போல் மேல சொன்ன எட்டு விதமான சக்திகளும் இறைவன் கிருஷ்ணரிடம் இருந்து பிரிந்த சக்திகளே.


மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...
Blogger Widgets