என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Sunday, October 28, 2012

ஸ்ரீ விஷ்ணு வின் ஆயிரம் நாமங்கள் - தமிழில்

விஸ்வம், விஷ்ணு, வஷத்காரா, பூதபவ்யா, பவத் பிரபு, பூதக்ரித், பாவா, பூத்தாத்மா, பூதபாவனா , பூத ஆத்மா , பரமாத்மா, முக்தானாம் பரநார்கதி , அவ்யயா, புருஷா, ஷாக்சி, க்ஷேத்ரன்ஜா , அக்ஷரா , யோகா, யோக விதாம்நேதா, பிரதானா, புருஷா, ஈஸ்வரா, நரஷிம்ஹா , வாப்பு, ஸ்ரீமான், கேசவா, புருஷோத்தமா, சர்வா, ஸ்தாணு, பூத்தாதி,  
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Monday, October 22, 2012

காமத்தை வெல்வது எப்படி ? HOW TO OVERWHELM THE LUST ?


"காமம் பாசத்துடன் வளர்த்த நாய் குட்டி போல "


ஒரு சிஷ்யன் பரமஹம்ஸரிடம் வந்து காமத்தை எப்படி ஜெயிப்பது என்று கேட்டான். தான ஜபதபங்கள் செய்து வந்த போதிலும் தன் மனத்தில் அடிக்கடி கெட்ட நினைவுகள் உண்டாவதாகத் தெரிவித்தான். அதற்குப் பகவான், பதில் சொன்னதாவது : - "ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான், விளையாடுவான், அதைக் கைகளில் தூக்கிக் கொண்டு போவான், அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தை கவனித்த ஓர் அறிஞர், நாய்க்கு அப்படி இடங்கொடுக்கக் கூடாதென்றும், அது பகுத்தறிவற்ற பிராணியாதலால் என்றைக்காவது ஒரு நாள் அவனைக் கடித்துவிடுமென்றும் கூறிவிட்டுச் சென்றனர். நாயின் எஜமானன் இதைக் கேட்டு அதன்படி நடக்க எண்ணித் தன் மடிமீதிருந்த அந்நாயைத் தூர எறிந்துவிட்டு, அதனோடு இனிமேல் ஒருபோதும் கொஞ்சிக் குலாவுவதில்லை என்று தீர்மானம் பண்ணினான். தன் எஜமானனுடைய மனமாற்றத்தை நாய் அறியவில்லையாதலால் அது அடிக்கடி அவனிடம் ஓடி வந்து குலாவத் தலைப்பட்டது. நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனத்தில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த நாயை நீ விலக்க நினைத்தாலும் அது உன்னை எளிதில் விடாது. இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிராமத்தில் அதனுடைய தொந்தரவுகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும். 

பின் குறிப்பு :

பெண்ணாசையை மனிதர்கள் விட்டொழிக்க வேண்டுமென்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசிப்பதிலிருந்து, பெண்களெல்லாம் கொடியவர்களென்றாவது, அவர்களின்மேல் வெறுப்புக் கொள்ள வேண்டுமென்றாவது சொல்வதாகக் கொள்ளுதல் கூடாது. அவர் தமது வாழ்க்கையிலும், உபதேச மொழிகளிலும் பெண் மக்களை சக்தி-ஜகன்மாதாவின் அவதார ரூபங்களாகவே கருதியுள்ளார். ஆண், பெண் இருபாலரும் சிற்றின்ப விஷயங்களில் அகப்பட்டு பகவானை மறக்கக் கூடாதென்பதை வற்புறுத்தவே, ஆத்மலாபமடைய விரும்புபவன் பெண்ணாசையையொழித்தல் வேண்டுமெனக் கூறினார். ஆண் மக்களைப் போன்று பெண் மக்களுக்கும், இவ்வுபதேசம் இன்றியமையாததெனக் கொள்ளல் வேண்டும்.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

இறைவனை எப்போது காண முடியும் ? when we can see god ?





குரு ஒருவரை, அவருடைய சீடன் கேட்டான், "குருவே, இறைவனைக் காணும் வழியை எனக்குச் சொல்லுங்கள்", என்று.

அவரும், "என்னுடன் வா, காட்டுகிறேன்", என்று கூறி, அந்த சீடனை அருகிலிருந்த ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் தண்ணீரில் இறங்கினர். திடீரென்று, குருவானவர், சீடனின் தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அழுத்தினார். சில நிமிடங்கள் கழித்துதான் அவனை விடுவித்தார். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சீடன், ஒருவழியாக விடுபட்டு எழுந்து நின்றான்.

"எப்படி இருந்தது?", என்று குரு கேட்டார்.

"என்னால் மூச்சே விட முடியவில்லை. தவித்துப் போய் விட்டேன். செத்து விடுவேன் என்றே நினைத்தேன்", என்றான் சீடன்.

"இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது அவனைக் காண்பாய்", என்றார், குரு.
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...
Blogger Widgets