என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, November 8, 2012

சிதம்பர ரகசியம் CHIDAMBARAM RASGASIYAM


தனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர்இறைவனைக் குறித்துத் துதிக்கதன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள்மனம் வருந்தவிஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும்கூடவே சிவனையும்தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்கவிரும்பிய விஷ்ணுஅவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்கஇரு பக்கமும் தாய்தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும்இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்திஇதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்யஇறைவன்மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூச்சுக் காற்றேசற்றும் சத்தமே இல்லாத இந்தமூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே "அஜபா நடனம்" என்று சொல்லப் படுகின்றது.


பின்னர் மகாவிஷ்ணு இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவிரும்பஇறைவன்தான் சிதம்பரம் க்ஷேத்திரத்திலே ஆடப்போவதாயும் ஆகவே அங்கே வந்து காணுமாறும் சொல்லத் தன் பரிவாரங்களோடு சிதம்பரத்திலே எழுந்தருளினார் மகாவிஷ்ணு. இவரே இன்றளவும் கோவிந்தராஜர் என்ற பெயரோடு சிதம்பரம் என்று சைவர்களாலும்திருச்சித்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப் படும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார். இருவரும் ஒருவரே என்பதே பெரும்பாலான பக்தர்களின் கூற்றும் கூட. இதை மெய்ப்படுத்துவதே போல் பல பக்திமான்களும் பாடியுள்ளனர்போற்றித் துதித்துள்ளனர் இருவரையும் பற்றி. முதலாழ்வார்களின் பாசுரத்தில் காணப்பட்டபடி, "அரன் நாரணன் நாமம்ஆன் விடை யுன்னூர்திஉரைநூல் மறை உறையும் கோயில் -வரை நீர் கருமம்அழிப்புஅளிப்பு கையது வேல் நேமிஉருவமெரி கார்மேனி ஒன்று" எனப் பொய்கை ஆழ்வாரும்,

"ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன்நான்முகன்அரன் என்னும் இவரை ஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே!" என்று நம்மாழ்வாரும் சொன்னபடிக்குக் காட்சி அளிக்கின்றனர்சிதம்பரத்தில் நடராஜரும்கோவிந்தராஜரும்.
சில கேள்விகளுக்குப் பதிலுக்காகக் காத்திருத்தலில் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே பதில் வரும்போது வரட்டும் என இதை முடிக்க எண்ணி உள்ளேன். பல மன்னர்களின் திருப்பணிகளாலும்பல பக்தர்களின் பெரும் முயற்சியாலும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்போது ஆரம்பித்ததுஎப்போது கட்டப்பட்டது என்று நிர்ணயம் செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள்நாளடைவில் ஒவ்வொரு பாகமாய்ச் சேர்க்கப் பட்டுஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவரால் கட்டப் பட்டு இன்று முழுப் பூர்த்தி அடைந்த கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. மாணிக்க வாசகரின் திரு அகவல் ஒன்றிலே அவர் பாடிய வண்ணம் 
"பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி! நீரிடை நான்காய்த் திகழ்ந்தாய் போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!"
என்னும்படிக்குஇந்தப் பூமியானதுசப்தம்ஸ்பரிசம்ரூபம்,ரசம்நாற்றம் என்ற ஐந்து குணங்களையும்நீரானதுசப்தம்ஸ்பரிசம்ரூபம்ரசம் என்ற நான்கு குணங்களையும்தீயானதுசப்தம்ஸ்பரிசம்,ரூபம் என்ற மூன்று குணங்களையும்வளியென்று சொல்லப் படும் காற்றானது சப்தம்ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும்அண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன.  இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம்எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க் காணப்படுகின்றார்.இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் இங்கே
நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம்தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார். திருவீழிமிழலைப் பதிகம் ஒன்றிலேசொன்னாற்போலேஅரியும்சிவனும் ஒன்றே என்னும் கருத்தைப் பக்தர்களுக்கு நிலைநாட்டவே இவ்விதம் கோயில் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாமோ???? "மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார் ... 

No comments:

Post a Comment

Blogger Widgets