என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Tuesday, September 3, 2013

மகாத்மா காந்தி ஜாதகம் - mahatma ganthi horoscope , www.kalaiarasan-rasipalan.blogspot.com

ஜோதிட மாமணி கலையரசன் உடைய வலை தளத்தில் அணைத்து ஜாதக விளக்கமும் www.kalaiarasan-rasipalan.blogspot.com

இந்திய தேசத்தின்  தந்தை மகாத்மா காந்தி அவர்களின் ஜாதகத்தை ஜோதிட ரீதியில் ஆராய்ந்து பார்த்ததில் கண்ட உண்மைகள்....மகாத்மா காந்தி அவர்கள் துலாம் லக்னம் சிம்மராசி யில் பிறந்து இருக்கிறார்.

ஆத்மாவை குறிக்கும் கிரகம் சூரியன் அவன் மோட்சஸ்தானம் என்று சொல்லபடுகின்ற 12 ம் வீட்டில் இருக்கிறான்.மேலும் தெய்வீக கிரகம் குரு வின் பார்வையை சூரியன் பெறுகிறான். 

மேலும் சந்திரனுக்கு பத்தாம் வீட்டில் தெய்வீக கிரகம் குரு இருக்கிறார். ஆகையால் ஆன்மீக சிந்தனை வலிமையாக இருந்தது.


நவாம்சத்தில் குரு பகவான் நீச்சம் பெற்று இருக்கின்ற காரணத்தால் அவ்வபோது இந்து மதத்தில் இருக்கின்ற சில பழக்கவழக்கத்தை மாற்றி தன்னுடைய சிந்தனையை புகுத்தவும் செய்தது.

லக்னத்தில் செவ்வாய் இருக்கின்ற காரணத்தாலும் லக்னத்திற்கு இரண்டு பக்கமும் இயற்கை பாவிகள் சனியும் சூரியனும் இருந்து பாவகத்தரி தோஷம் உண்டாகி இருப்பதாலும் உடலில் எப்போதும் ஒரு சூடு இருக்கும் சூடு சம்பந்தப்பட்ட நோய் இருந்து இருக்கும். மேலும் செவ்வாய் ஒரு ரத்த கிரகம் ஆகையால் ரத்தம் சம்பந்த பட்ட நோய் இருந்து இருக்கும்.

மன போராட்டம் ஏன் ?

சந்திரன் மனத்தை குறிக்கின்ற கிரகம் அவன் பாவ கிரகம் சனியினால் பார்க்கபடுகின்றான் மேலும் சந்திரனுக்கு இரண்டு பக்கமும் பாவிகள் ராகுவும் சூரியனும் இருந்து பாவ கத்தரி தோஷத்தை உண்டாக்கி இருக்கின்ற காரணத்தால் மனம் எப்போதும் ஒரு போராட்டத்தில் இருந்ததை உணர முடிகிறது.

ஆன்மீக சிந்தனைக்கு காரணம் என்ன?

ஆத்மா வை சுமந்து வருபவன் சூரியன் அவன் மோட்சஷ்தானத்தில் இருந்து தெய்வீக கிரகம் குரு வின் பார்வையை பெறுவதாலும் சந்திரனுக்கு பத்தில் குரு இருப்பதாலும் பலமான ஆன்மீக சிந்தனை கொடுத்தது.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

அன்னை தெரசா ஜாதகம்

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Sunday, March 3, 2013

சுகதேவ் -- வியாச முனிவரின் மகனின் கதை : sukadev vysa story


பாகவதம் ( பாகவத்கதை ) முதலில் நாரதர் வியாச முனிவருக்கு சொன்னார்.

வியாசமுனிவர் சுகதேவ் இக்கு சொன்னார்.

சுகதேவ் பரிக்சித் இக்கு சொன்னார்.

சுதா முனிவர் அணைத்து ரிஷிகளுகும் நைமிசாரண்யம் யாகத்தில் சொன்னார்.

இதில் சுகதேவ் இன் கதை மிகவும் ஆத்மா விற்கு இதம் அளிக்கும் விதமாக உள்ளது.

சுகதேவ் சிறு வயதில் இருந்தே நாரதற்கு பணிவிடை செய்து அந்த ஆஷ்ரமதிலேயே இருந்ததால் அவர் தன்னை உணர்ந்து விட்டார். மேலும் இறைவனையும் உணர்ந்து விட்டார்.

அப்படிப்பட்ட சுகதேவ் விற்கு பிரம்மா வின் கட்டளை படி வியாச முனிவர் தனது மகன் உலகியல் வாழ்க்கை வாழ்ந்து மனிதர்களை உருவாக்க வேண்டும் . ஆகையால் அவர் தனது மகன் சுகதேவ் விற்கு திருமணம் செய்ய முடிவு செய்து விட்டார்.

அது தெரிந்த சுகதேவ் வீட்டை விட்டு வெளியேறி போய் கொண்டு இருக்கிறார். அப்போது அவர் ஒரு குளத்தின் கரையை கடைந்து சென்று விட்டார்.

சுகதேவ் வின் பின்னே அந்த குளத்தின் கரை அருகே  வியாச முனிவர் சென்ற போது அங்கே குளித்த பெண்கள் வெக்கதில் தனது துணிகளை எடுத்து மறைத்து கொண்டனர்.

அப்போது வியாச முனிவர் கோப பட்டு அந்த பெண்களை பார்த்து கேட்டார் : நான் வயது முதிர்ந்த மனிதன் நான் வரும் போது என்னை பார்த்து வெக்க பட்டு துணியை எடுத்து உடலை மூடுகிரீர்கள் . 

என் மகன் இந்த வழியில் தான் சென்றான் நீங்கள் ஏன் வெக்க பட்டு உங்கள் உடலை மூட வில்லை.

என்று கோவப்பட்டு கூறினார்.

அதற்கு அந்த பென்கள் கூறினார்கள் : இந்த குளத்தில் பல படிகட்டுகள் இருக்கின்றன, பல மரங்கள் இந்த குளத்தை சுற்றி இருக்கின்றன அவைகளை   பார்த்து நாங்கள் வெக்க படுவதில்லை.

அதே போல தான் உங்கள் மகனும் , அவர் தன்னில் தன்னை உணர்ந்து உடல் அளவில் அவர் ஒரு மரம் போல இருந்தார்.

அவர் இந்த உலகியல் இன்பத்தில் விருப்பம் இல்லாதவர் போல இருந்தார். ஆகையால் நாங்கள் அவரை பற்றி நினைக்க கூட இல்லை,

என்று கூறியதும் வியாசர் புரிந்து கொண்டார் .

சுகதேவ் இறைநிலை யில் உள்ளார் என்பதை புரிந்து கொண்டார்.
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Thursday, February 21, 2013

ஹைதராபாத் வெடிகுண்டு சம்பவம்-Hyderabad Blast: 'Multiple Deaths' written by KATTUMANNARKOIL KALAIARASANஹைதராபாத்தில்வெடிகுண்டு வைத்து அப்பாவிகளை கொன்ற நாய்களை நடு தெருவில் வைத்து தூக்கிலிட வேண்டும்.( அயோக்கிய நாய் அஜ்மல் கசாபை கொன்றது போல )

இந்திய அரசாங்கம் இதை செய்ய வேண்டும் .!!!!!!!!!!!!!!!!!!!!!!
மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Sunday, January 27, 2013

கர்மா wriiten by KATTUMANNARKOIL KALAIARASAN


குணங்கள் மூன்று . அவைகள் ... சத்வம் , ராஜசம் , தாமசம்  ஆகும்.

இவற்றில் சத்வகுனம் மேன்மை ஆனது ராஜச குணம் பொருளாசை உள்ள குணம்.தாமத குணம் உண்மை அறியாத குணம்.

சத்வ குணம் மேன்மையான குணமாக இருந்தாலும் அதையும் விட உயரமான இடத்திருக்கு செல்ல வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார்.

கடவுளை அடையவேண்டும் என்ற ஆசை கூட வைக்க கூடாது. அதையும் தாண்டி நம்முள் இருக்கின்ற இறைவனை காண வேண்டும்.

அமைதியாக பிரம்ம நிலையை அடைய வேண்டும்.

சிலர் நினைப்பதுண்டு.....

சந்நியாசி ஆன பிறகு பல துயரங்கள் சந்திக்கிறார்கள் ஏன் ?

ஒரு மனிதனை இறைவன் ஏற்று கொண்டால் , அந்த மனிதனிடம் பாவமும் இருக்க கூடாது புண்ணியமும் இருக்க கூடாது.

நீங்கள் நிறைய நல்ல காரியம் செய்து இருந்தால் அதை இறைவன் செய்ததாக நினைக்க வேண்டும். அப்படி நினைக்காமல் நானே செய்தேன் என்று கர்வத்தில் இருந்தால் அந்த நல்ல காரியத்தின் புண்ணியம் உங்களிடம் சேரும். புண்ணியம் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு மறு பிறவி கொடுத்து நல்ல வீட்டில் பிறக்க வைத்து புகழ் கொடுப்பார்.

ஆகையால் ஒரு மனிதன் இறைவனை அடைய வேண்டும் என்று நினைத்தால் அவன் எந்த பாவ புண்ணியத்தையும் ஏற்று கொள்ள கூடாது.

அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து சமநிலையில் இருந்து கடமையை செய்ய வேண்டும். உலக நலனுக்காக செய்ய வேண்டும்.

அப்படி செய்யும் போது எந்த பாவ புண்ணியமும் சேராது.

பாவ புண்ணியம் உள்ள மனிதன் இறைவனை அடைய நினைத்து சந்நியாசம் எடுத்தால் அவன் வைத்துள்ள அணைத்து பாவமும் இந்த பிறவியிலேயே தீர்க்க வேண்டும். அதற்காக பல கஷ்டங்களை அனுபவிப்பான்.

புண்ணியம் இருந்தால் அதற்கான நல்ல பலனையும் அனுபவிப்பான்.

முற்றிலும் பாவமும் புண்ணியமும் தீர்ந்த கடமைகள் முற்றிலும் தீர்ந்த ஒரு மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இறைவனை அடைகிறான்.


மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Wednesday, January 23, 2013

புறா கதை -- ஆன்மீக விளக்கம் - - கலையரசன் காட்டுமன்னார்கோயில்


புறாக்கள் கூட்டமாக கோவிலில் அமர்ந்து இருந்தது அங்கே கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

அந்த நேரத்தில் கோவில் திருவிழா வந்தது , அதனால் அங்கே சாரம் போட்டு வண்ணம் அடிக்க ஆட்கள் மேலே ஏறினார்கள் .

அதனால் அந்த புறாக்கள் கோவிலை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால் அந்த புறாக்கள் கோவிலை விட்டு அந்த புறாக்கள் வெளியேறி மசூதியில் சென்று கூடு கட்டி வாழ்ந்தது.

அந்த நேரத்தில் ரம்ஜான் வந்ததால் அங்கே வண்ணம் அடிக்க சாரம் போட்டு ஆட்கள் மேலே ஏறினார்கள்.

அதனால் அந்த புறாக்கள் அங்கிருந்து வெளியேறி ச்ர்ச் ( கிறிஸ்துவ ஆலயம் ) இல் குடியேறியது.

கிறிஸ்மஸ் வந்ததால் அங்கே வண்ணம் அடிக்க சாரம் கட்டி ஆட்கள் மேலே ஏறினார்கள். அப்போது புறாக்கள் குழம்பி விட்டன.

அப்போது ஒரு குஞ்சு புறா தனது தாய் புறாவை பார்த்து கேட்டது....

நான் முதலில் கோவிலில் இருந்தோம் ....

பிறகு மசூதி வந்தோம் .....

பிறகு ச்ர்ச் வந்தோம்.....

நாம் எங்கு போனாலும் புறா என்று தான் அழைக்கபடுகிறோம்...

ஆனால் ஒரு மனிதன் கோவிலுக்கு சென்றால் அவன் இந்து என்றும்

மசூதிக்கு சென்றால் அவன் முஸ்லிம் என்றும் ....

ச்ர்ச் -- இக்கு சென்றால் அவன் கிறிஸ்துவன்  என்றும் அழைக்கபடுகிறானே , ஏன் என்று தனது தாயை பார்த்து குஞ்சு புறா கேட்டது ...

அப்போது அந்த தாய் புறா சொன்னது நாம் மிகவும் மேலே பறக்கிறோம் ஆகையால் நாம் அனைவரும் எங்கே இருந்தாலும் எங்கே போனாலும் ஒன்று தான் என்பதை உணர்ந்து இருக்கிறோம்  .

ஆனால் மனிதர்கள் நமக்கு மிக கீழே இருப்பதால் அவர்கள் இதை உணர்வது இல்லை. ஆகையால் அவர்கள் தனக்குள் வித்தியாசம் காண்கிறார்கள்.

" உண்மையில் இறைவன் ஒருவனே "
" பல வடிவங்களில் பல பரிணாமங்களில் காணபட்டாலும் அவன் ஒருவனே " மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...
Blogger Widgets