என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Sunday, January 27, 2013

கர்மா wriiten by KATTUMANNARKOIL KALAIARASAN


குணங்கள் மூன்று . அவைகள் ... சத்வம் , ராஜசம் , தாமசம்  ஆகும்.

இவற்றில் சத்வகுனம் மேன்மை ஆனது ராஜச குணம் பொருளாசை உள்ள குணம்.தாமத குணம் உண்மை அறியாத குணம்.

சத்வ குணம் மேன்மையான குணமாக இருந்தாலும் அதையும் விட உயரமான இடத்திருக்கு செல்ல வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார்.

கடவுளை அடையவேண்டும் என்ற ஆசை கூட வைக்க கூடாது. அதையும் தாண்டி நம்முள் இருக்கின்ற இறைவனை காண வேண்டும்.

அமைதியாக பிரம்ம நிலையை அடைய வேண்டும்.

சிலர் நினைப்பதுண்டு.....

சந்நியாசி ஆன பிறகு பல துயரங்கள் சந்திக்கிறார்கள் ஏன் ?

ஒரு மனிதனை இறைவன் ஏற்று கொண்டால் , அந்த மனிதனிடம் பாவமும் இருக்க கூடாது புண்ணியமும் இருக்க கூடாது.

நீங்கள் நிறைய நல்ல காரியம் செய்து இருந்தால் அதை இறைவன் செய்ததாக நினைக்க வேண்டும். அப்படி நினைக்காமல் நானே செய்தேன் என்று கர்வத்தில் இருந்தால் அந்த நல்ல காரியத்தின் புண்ணியம் உங்களிடம் சேரும். புண்ணியம் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு மறு பிறவி கொடுத்து நல்ல வீட்டில் பிறக்க வைத்து புகழ் கொடுப்பார்.

ஆகையால் ஒரு மனிதன் இறைவனை அடைய வேண்டும் என்று நினைத்தால் அவன் எந்த பாவ புண்ணியத்தையும் ஏற்று கொள்ள கூடாது.

அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து சமநிலையில் இருந்து கடமையை செய்ய வேண்டும். உலக நலனுக்காக செய்ய வேண்டும்.

அப்படி செய்யும் போது எந்த பாவ புண்ணியமும் சேராது.

பாவ புண்ணியம் உள்ள மனிதன் இறைவனை அடைய நினைத்து சந்நியாசம் எடுத்தால் அவன் வைத்துள்ள அணைத்து பாவமும் இந்த பிறவியிலேயே தீர்க்க வேண்டும். அதற்காக பல கஷ்டங்களை அனுபவிப்பான்.

புண்ணியம் இருந்தால் அதற்கான நல்ல பலனையும் அனுபவிப்பான்.

முற்றிலும் பாவமும் புண்ணியமும் தீர்ந்த கடமைகள் முற்றிலும் தீர்ந்த ஒரு மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இறைவனை அடைகிறான்.


மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

Wednesday, January 23, 2013

புறா கதை -- ஆன்மீக விளக்கம் - - கலையரசன் காட்டுமன்னார்கோயில்


புறாக்கள் கூட்டமாக கோவிலில் அமர்ந்து இருந்தது அங்கே கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

அந்த நேரத்தில் கோவில் திருவிழா வந்தது , அதனால் அங்கே சாரம் போட்டு வண்ணம் அடிக்க ஆட்கள் மேலே ஏறினார்கள் .

அதனால் அந்த புறாக்கள் கோவிலை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால் அந்த புறாக்கள் கோவிலை விட்டு அந்த புறாக்கள் வெளியேறி மசூதியில் சென்று கூடு கட்டி வாழ்ந்தது.

அந்த நேரத்தில் ரம்ஜான் வந்ததால் அங்கே வண்ணம் அடிக்க சாரம் போட்டு ஆட்கள் மேலே ஏறினார்கள்.

அதனால் அந்த புறாக்கள் அங்கிருந்து வெளியேறி ச்ர்ச் ( கிறிஸ்துவ ஆலயம் ) இல் குடியேறியது.

கிறிஸ்மஸ் வந்ததால் அங்கே வண்ணம் அடிக்க சாரம் கட்டி ஆட்கள் மேலே ஏறினார்கள். அப்போது புறாக்கள் குழம்பி விட்டன.

அப்போது ஒரு குஞ்சு புறா தனது தாய் புறாவை பார்த்து கேட்டது....

நான் முதலில் கோவிலில் இருந்தோம் ....

பிறகு மசூதி வந்தோம் .....

பிறகு ச்ர்ச் வந்தோம்.....

நாம் எங்கு போனாலும் புறா என்று தான் அழைக்கபடுகிறோம்...

ஆனால் ஒரு மனிதன் கோவிலுக்கு சென்றால் அவன் இந்து என்றும்

மசூதிக்கு சென்றால் அவன் முஸ்லிம் என்றும் ....

ச்ர்ச் -- இக்கு சென்றால் அவன் கிறிஸ்துவன்  என்றும் அழைக்கபடுகிறானே , ஏன் என்று தனது தாயை பார்த்து குஞ்சு புறா கேட்டது ...

அப்போது அந்த தாய் புறா சொன்னது நாம் மிகவும் மேலே பறக்கிறோம் ஆகையால் நாம் அனைவரும் எங்கே இருந்தாலும் எங்கே போனாலும் ஒன்று தான் என்பதை உணர்ந்து இருக்கிறோம்  .

ஆனால் மனிதர்கள் நமக்கு மிக கீழே இருப்பதால் அவர்கள் இதை உணர்வது இல்லை. ஆகையால் அவர்கள் தனக்குள் வித்தியாசம் காண்கிறார்கள்.

" உண்மையில் இறைவன் ஒருவனே "
" பல வடிவங்களில் பல பரிணாமங்களில் காணபட்டாலும் அவன் ஒருவனே " மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...
Blogger Widgets