என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Sunday, January 27, 2013

கர்மா wriiten by KATTUMANNARKOIL KALAIARASAN


குணங்கள் மூன்று . அவைகள் ... சத்வம் , ராஜசம் , தாமசம்  ஆகும்.

இவற்றில் சத்வகுனம் மேன்மை ஆனது ராஜச குணம் பொருளாசை உள்ள குணம்.தாமத குணம் உண்மை அறியாத குணம்.

சத்வ குணம் மேன்மையான குணமாக இருந்தாலும் அதையும் விட உயரமான இடத்திருக்கு செல்ல வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார்.

கடவுளை அடையவேண்டும் என்ற ஆசை கூட வைக்க கூடாது. அதையும் தாண்டி நம்முள் இருக்கின்ற இறைவனை காண வேண்டும்.

அமைதியாக பிரம்ம நிலையை அடைய வேண்டும்.

சிலர் நினைப்பதுண்டு.....

சந்நியாசி ஆன பிறகு பல துயரங்கள் சந்திக்கிறார்கள் ஏன் ?

ஒரு மனிதனை இறைவன் ஏற்று கொண்டால் , அந்த மனிதனிடம் பாவமும் இருக்க கூடாது புண்ணியமும் இருக்க கூடாது.

நீங்கள் நிறைய நல்ல காரியம் செய்து இருந்தால் அதை இறைவன் செய்ததாக நினைக்க வேண்டும். அப்படி நினைக்காமல் நானே செய்தேன் என்று கர்வத்தில் இருந்தால் அந்த நல்ல காரியத்தின் புண்ணியம் உங்களிடம் சேரும். புண்ணியம் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு மறு பிறவி கொடுத்து நல்ல வீட்டில் பிறக்க வைத்து புகழ் கொடுப்பார்.

ஆகையால் ஒரு மனிதன் இறைவனை அடைய வேண்டும் என்று நினைத்தால் அவன் எந்த பாவ புண்ணியத்தையும் ஏற்று கொள்ள கூடாது.

அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து சமநிலையில் இருந்து கடமையை செய்ய வேண்டும். உலக நலனுக்காக செய்ய வேண்டும்.

அப்படி செய்யும் போது எந்த பாவ புண்ணியமும் சேராது.

பாவ புண்ணியம் உள்ள மனிதன் இறைவனை அடைய நினைத்து சந்நியாசம் எடுத்தால் அவன் வைத்துள்ள அணைத்து பாவமும் இந்த பிறவியிலேயே தீர்க்க வேண்டும். அதற்காக பல கஷ்டங்களை அனுபவிப்பான்.

புண்ணியம் இருந்தால் அதற்கான நல்ல பலனையும் அனுபவிப்பான்.

முற்றிலும் பாவமும் புண்ணியமும் தீர்ந்த கடமைகள் முற்றிலும் தீர்ந்த ஒரு மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இறைவனை அடைகிறான்.


No comments:

Post a Comment

Blogger Widgets