என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Tuesday, September 3, 2013

மகாத்மா காந்தி ஜாதகம் - mahatma ganthi horoscope , www.kalaiarasan-rasipalan.blogspot.com

ஜோதிட மாமணி கலையரசன் உடைய வலை தளத்தில் அணைத்து ஜாதக விளக்கமும் www.kalaiarasan-rasipalan.blogspot.com

இந்திய தேசத்தின்  தந்தை மகாத்மா காந்தி அவர்களின் ஜாதகத்தை ஜோதிட ரீதியில் ஆராய்ந்து பார்த்ததில் கண்ட உண்மைகள்....மகாத்மா காந்தி அவர்கள் துலாம் லக்னம் சிம்மராசி யில் பிறந்து இருக்கிறார்.

ஆத்மாவை குறிக்கும் கிரகம் சூரியன் அவன் மோட்சஸ்தானம் என்று சொல்லபடுகின்ற 12 ம் வீட்டில் இருக்கிறான்.மேலும் தெய்வீக கிரகம் குரு வின் பார்வையை சூரியன் பெறுகிறான். 

மேலும் சந்திரனுக்கு பத்தாம் வீட்டில் தெய்வீக கிரகம் குரு இருக்கிறார். ஆகையால் ஆன்மீக சிந்தனை வலிமையாக இருந்தது.


நவாம்சத்தில் குரு பகவான் நீச்சம் பெற்று இருக்கின்ற காரணத்தால் அவ்வபோது இந்து மதத்தில் இருக்கின்ற சில பழக்கவழக்கத்தை மாற்றி தன்னுடைய சிந்தனையை புகுத்தவும் செய்தது.

லக்னத்தில் செவ்வாய் இருக்கின்ற காரணத்தாலும் லக்னத்திற்கு இரண்டு பக்கமும் இயற்கை பாவிகள் சனியும் சூரியனும் இருந்து பாவகத்தரி தோஷம் உண்டாகி இருப்பதாலும் உடலில் எப்போதும் ஒரு சூடு இருக்கும் சூடு சம்பந்தப்பட்ட நோய் இருந்து இருக்கும். மேலும் செவ்வாய் ஒரு ரத்த கிரகம் ஆகையால் ரத்தம் சம்பந்த பட்ட நோய் இருந்து இருக்கும்.

மன போராட்டம் ஏன் ?

சந்திரன் மனத்தை குறிக்கின்ற கிரகம் அவன் பாவ கிரகம் சனியினால் பார்க்கபடுகின்றான் மேலும் சந்திரனுக்கு இரண்டு பக்கமும் பாவிகள் ராகுவும் சூரியனும் இருந்து பாவ கத்தரி தோஷத்தை உண்டாக்கி இருக்கின்ற காரணத்தால் மனம் எப்போதும் ஒரு போராட்டத்தில் இருந்ததை உணர முடிகிறது.

ஆன்மீக சிந்தனைக்கு காரணம் என்ன?

ஆத்மா வை சுமந்து வருபவன் சூரியன் அவன் மோட்சஷ்தானத்தில் இருந்து தெய்வீக கிரகம் குரு வின் பார்வையை பெறுவதாலும் சந்திரனுக்கு பத்தில் குரு இருப்பதாலும் பலமான ஆன்மீக சிந்தனை கொடுத்தது.

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...

அன்னை தெரசா ஜாதகம்

மேலும் படிக்க கிளிக் செய்யுங்கள் ...
Blogger Widgets