என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Tuesday, September 3, 2013

மகாத்மா காந்தி ஜாதகம் - mahatma ganthi horoscope , www.kalaiarasan-rasipalan.blogspot.com

ஜோதிட மாமணி கலையரசன் உடைய வலை தளத்தில் அணைத்து ஜாதக விளக்கமும் www.kalaiarasan-rasipalan.blogspot.com

இந்திய தேசத்தின்  தந்தை மகாத்மா காந்தி அவர்களின் ஜாதகத்தை ஜோதிட ரீதியில் ஆராய்ந்து பார்த்ததில் கண்ட உண்மைகள்....மகாத்மா காந்தி அவர்கள் துலாம் லக்னம் சிம்மராசி யில் பிறந்து இருக்கிறார்.

ஆத்மாவை குறிக்கும் கிரகம் சூரியன் அவன் மோட்சஸ்தானம் என்று சொல்லபடுகின்ற 12 ம் வீட்டில் இருக்கிறான்.மேலும் தெய்வீக கிரகம் குரு வின் பார்வையை சூரியன் பெறுகிறான். 

மேலும் சந்திரனுக்கு பத்தாம் வீட்டில் தெய்வீக கிரகம் குரு இருக்கிறார். ஆகையால் ஆன்மீக சிந்தனை வலிமையாக இருந்தது.


நவாம்சத்தில் குரு பகவான் நீச்சம் பெற்று இருக்கின்ற காரணத்தால் அவ்வபோது இந்து மதத்தில் இருக்கின்ற சில பழக்கவழக்கத்தை மாற்றி தன்னுடைய சிந்தனையை புகுத்தவும் செய்தது.

லக்னத்தில் செவ்வாய் இருக்கின்ற காரணத்தாலும் லக்னத்திற்கு இரண்டு பக்கமும் இயற்கை பாவிகள் சனியும் சூரியனும் இருந்து பாவகத்தரி தோஷம் உண்டாகி இருப்பதாலும் உடலில் எப்போதும் ஒரு சூடு இருக்கும் சூடு சம்பந்தப்பட்ட நோய் இருந்து இருக்கும். மேலும் செவ்வாய் ஒரு ரத்த கிரகம் ஆகையால் ரத்தம் சம்பந்த பட்ட நோய் இருந்து இருக்கும்.

மன போராட்டம் ஏன் ?

சந்திரன் மனத்தை குறிக்கின்ற கிரகம் அவன் பாவ கிரகம் சனியினால் பார்க்கபடுகின்றான் மேலும் சந்திரனுக்கு இரண்டு பக்கமும் பாவிகள் ராகுவும் சூரியனும் இருந்து பாவ கத்தரி தோஷத்தை உண்டாக்கி இருக்கின்ற காரணத்தால் மனம் எப்போதும் ஒரு போராட்டத்தில் இருந்ததை உணர முடிகிறது.

ஆன்மீக சிந்தனைக்கு காரணம் என்ன?

ஆத்மா வை சுமந்து வருபவன் சூரியன் அவன் மோட்சஷ்தானத்தில் இருந்து தெய்வீக கிரகம் குரு வின் பார்வையை பெறுவதாலும் சந்திரனுக்கு பத்தில் குரு இருப்பதாலும் பலமான ஆன்மீக சிந்தனை கொடுத்தது.வலிமையான பேச்சி கூர்மையான அறிவு எப்படி ?

அறிவுக்கு உரிய கிரகம் புதன் லக்னத்தில் நன்பன் சுக்கிரன் வீட்டில் சுக்கிரனுடன் சேர்ந்து இருப்பதால் கூர்மையான அறிவும் தெளிவான பேச்சும் கொடுத்தது.

நல்ல காரியங்கள் ஏன் செய்ய வைத்தது ?

பத்தாம் இடம் கர்மஷ்தானம் என்று அழைக்கபடுகிறது. இந்த இடத்தில் ராகு இருப்பது எப்போதும் நல்ல காரியத்தில் ஜாதகரை ஈடுபட வைக்கும்.

மேலும் சந்திரனுக்கு பத்தாம் வீட்டில் குரு இருப்பதால் கண்ணியமான காரியத்தை செய்ய வைக்கும்.

அஹிம்சை என்று சொன்னது கோழைதனமா ?

லக்னத்திற்கு மூன்றாம் இடம் தைரிய ஸ்தானம் என்று அழைக்கபடுகிறது. மூன்றாம் அதிபதி சனி இரண்டாம் வீட்டில் இருந்து குருவின் பார்வை பெறுவதால் மிகுந்த தைரியம் இருக்கும்.சந்திரனுக்கு மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் அதீத துணிச்சல் கொடுக்கும்.

இப்படி துணிச்சல் அதிகமாக இருக்கும் இவர் ஏன் அஹிம்சை வழியில் சென்றார். அதற்கான காரணம் துணிச்சல் கொடுக்ககூடிய கிரகம் செவ்வாய் சுப கிரகம் புதன் மற்றும் சுக்கிரனுடன் சேர்ந்து இருப்பதால் வீரத்தை காட்டுவதை விட சகித்து கொண்டுஅஹிம்சை வழியில்  எதிரியின் தவறை உணர செய்ய வைத்தார்.

" கடினமான உலோகம் எப்படி அதிக சூட்டினால் இளகி விடுகிறதோ அப்படி தான் கடினமான மனம் கூட அகிம்சை வழியில் செல்லும் மனதின் சகிப்பு தன்மையை கண்டு தோற்று விடும் "

                                                                                   --- சொன்னது மகாத்மா காந்தி 

ஒருவர் மக்கள் மத்தியில் புகழ் பெற வேண்டும் என்றால் பத்தாம் இடத்திற்கும் சனி பகவானுக்கும் சம்பந்தம் வேண்டும். இது ஒரு  முக்கிய அம்சம் ஆகும்.

இவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு பத்தாம் வீட்டில் இருக்கும் குருவையும் சந்திரனுக்கு பத்தாம் வீட்டையும் பார்ப்பதால் இவரின் பேச்சு மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.

ராகு திசா ஆரம்பம் : 11 - 06 - 1919 

ராகு பகவான் லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் இருக்கிறார் . இதனால் இவர் சுயராஜ்யதிர்க்காக போராட ஆரம்பித்தார். இருபினும் சந்திரனுக்கு பன்னிரெண்டாம் வீட்டில் ராகு இருக்கிறார். 12 ம் இடத்தில் இருக்கின்ற கிரகத்தின் திசா புத்தி நடைபெறும் போது சிறை தண்டனை மற்றும் நஷ்டம் மற்றும் தோல்வி போன்ற பலன்கள் கொடுக்கும் . ஆகையால் இவரின் போராட்டம் சமூகத்திற்கும் சட்டத்திற்கும் எதிரானவை என்று வெள்ளை காரர்கள் இவரை சிறையில் அடைத்தார்கள்.

இருபினும் சந்திரனுக்கு பத்தாம் வீட்டில் இருக்கும் குரு வின் புத்தியில் இவர் விடுதலை செய்யப்பட்டார்.

ராகு திசா கேது புத்தி : 

மீண்டும்  சுய ராஜ்யம் வேண்டும் என்று பெரிய போராட்டத்தை நடத்தினார். இந்த திசா புத்தி யிலும்  கைது செய்ய பட்டார்.

குரு திசா புதன் புத்தி : 

குரு ஆறாம் வீட்டுக்கு அதிபதி மேலும் புதன் பன்னிரெண்டாம் வீட்டுக்கு அதிபதி இருவருமே சிறைசாலையை குறிக்கிறார்கள். ஆகயால் இந்த சமயத்திலும் இவர் சிறைசாலையிலேயே காலத்தை கழித்தார் .

குரு திசா சுக்கிர புத்தி : 

ஆறாம் அதிபதி குரு எட்டாம் வீட்டில் இருக்கிறார் . இது பாதி விபரீதராஜ யோகம் . மேலும் சுக்கிரன் லக்னத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். இந்த நேரத்தில் தான் மகாத்மா காந்தி யின் கனவு அதாவது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.

இருபினும் சுதந்திரத்திற்கு பிறகு மகாத்மா காந்தி சந்தோசமாக இல்லை ஏன் என்றால் இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு நாடு பிரித்து மக்கள் அங்கும் இங்கும் பிரிந்து போகிறார்கள் . அவரின் கனவே சேர்ந்து ஒன்றாக வாழ வேண்டும் என்பது தான். 

கனவு முழுமையாக நிறைவேறாததால் துக்கம் அடைந்தார். 

இந்த துக்கம் ஏன் ?

குரு திசை சுக்கிர புத்தி  - குரு மற்றும் சுக்கிரன் இருவருமே செவ்வாய் மற்றும் சனி போன்ற பாவிகளின் சம்பந்தம் பெற்று இருப்பதால் இந்த திசை கொஞ்சம் நல்ல பலனை கொடுத்தாலும் இவர் மனம் சங்கடதிலே இருந்தது.

சனியும் செவ்வாயும் சேர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே  பாகபிரிவினையை செய்து மனதிற்கு துக்கத்தை கொடுத்தார்கள்.


துப்பாக்கியால் சுடப்பட்டு மரணம் ஏன் ?

குரு தசை சூரிய புத்தி : 

குரு ஆயுள் ஸ்தானத்தில் இருந்து மாரணம் கொடுக்ககூடிய 2,7  - ம் அதிபதி செவ்வாய் பார்வை பெறுகிறார். மேலும் சூரியன் 12 - இல் மறைந்து கிடக்கிறார். இந்த திசா புத்தி மரணத்தை கொடுக்க கடமை பட்டு இருக்கிறது. 

மேலும் 

கொடூர மரணம் ஏன் ?

ஆயுள் ஸ்தானத்தை சனி செவ்வாய் போன்ற பாவிகள் பார்ப்பதால் சுடப்பட்டு மரணம் அடைந்தார்.

இருபினும் அவரை பொறுத்த வரை இது சுமூகமான மரணம் தான் . ஏன் எனில் அவர் நோய் வாய் பட்டு படுத்த படுக்கையில் கிடக்க வில்லை. கடைசி நாள் வரை அவர் அனைவரிடமும் பேசி கொண்டு நன்றாக இருந்தார். 

இது எதனால் ?

குரு என்ற இயற்கை  சுப கிரகம் எட்டாம் வீட்டில் இருந்த காரணத்தால் நொடியில் மரணம் சம்பவித்தது.

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

இப்படி பாடு பட்டு உயிரை விட்டு  வாங்கிய சுதந்திரத்தின்  பெருமையை போற்றுவோம் கூடி வாழ்ந்து மகாத்மா காந்தியின் கனவை பூர்த்தி செய்வோம். 

!!!!!!!!!வந்தே மாதரம் !!!!!!!!

தாயே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
  தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்
கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! 'அபலா '#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்
திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்நன்றி , என்றும் அன்புடன் ......

ஜோதிட மாமணி கலையரசன் 

காட்டுமன்னார்கோயில்

2 comments:

 1. வணக்கம்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_11.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 2. "அன்பும் பண்பும் அழகுற இணந்து
  துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!

  வலைப் பூ நண்பரே!
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  நட்புடன்,
  புதுவை வேலு,
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete

Blogger Widgets